கொரோனா குறித்து பரவி வரும் தவறான தகவல்கள் குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.பரப்பட்டு வரும் தவறான தகவல்கள் உள்ளிட்ட காரணிகளே உலகம் முழுவதும் கொரோனா அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
இதுக்குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில்நுட்ப குழு தலைவர் மரியா வான் கெர்கோவ், ஒமைக்ரான் தான் கொரோனாவின் கடைசி திரிபு என்றும் இதோடு கொரோனா முடிந்துவிட்டது என்றும் ஆதாரமற்ற பல்வேறு தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஒமைக்ரான் வைரஸ் மனிதர்களுக்கு முந்தைய உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ்களை ஒப்பிடும் போது குறைந்த அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துகிறதும்.இதனால் கொரோனா நோய் தொற்றும் அழிந்துவிட்டது என்று கூறுவது சரியானது அல்ல என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
பின்னார் கொரோனா தடுப்பூசி விழுப்புணர்வு குறித்து பேசிய அவர்,ஒமைக்ரானுக்கு எதிராகவும் உயிரிழப்பு மற்றும் நோயில் தீவிரத்தன்மையை தடுப்பதிலும் தடுப்பூசி மிக சிறப்பாக செயலாற்றி வருகிறது என்று கூறினார். ஒமைகானிலிருந்து உருமாற்றமடைந்த பிஏ2 என்ற திரிபு மிக வேகமாக பரவக்கூடிய தன்மை கொண்டதாக உள்ளது. பிஏ.1, பிஏ.2 ஆகிய திரிபுகளை ஒப்பிடுகையில் தீவிரத்தன்மையில் வித்தியாசங்கள் காணப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
undefined
தற்போது தென் கொரியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. சீனாவில் ஓராண்டுகளுக்கு பிறகு கொரோனா பாதிப்பினால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தினசரி கொரோனா தொற்று பாதிப்பும் கடந்த மாதங்களை விட அதிகரித்துள்ளது. இதனால் அங்கு கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. தென் கொரியாவில் ஒரே நாளில் 6 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை சுட்டிகாட்டிய பேசிய உலக சுகாதார அமைப்பு, இந்த வாரம் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக, பெருந்தொற்று முடிவுக்கு வர இன்னும் நிறைய காலம் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை கவனமுடன் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் உலகில் தகுதியுள்ள அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே சில நாடுகளில் கொரோனா பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைவாக பதிவாகியுள்ளது. எனவே உலக நாடுகள் விழிப்புடன் இருந்து, பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில், கடந்த வாரம் ஆறு லட்சத்திற்கும் அதிகமானோர் புதிதாக பாதிக்கப்பட்டனர். உலக அளவில் வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு அதிக பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறும் உலக சுகாதார அமைப்பு, தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தென் கொரிய அரசு கவனம் செலுத்தி வருவதால், உயிரிழப்பு குறைவாக உள்ளதாக கூறியுள்ளது.