Corona India: சீனாவில் அதிகரிக்கும் கொரோனா.. அலர்ட் ஆக இருங்க மக்களே.. எச்சரிக்கும் ஆளுநர்..

By Thanalakshmi VFirst Published Mar 20, 2022, 9:18 PM IST
Highlights

சீனாவில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
 

சீனாவில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி ஆளுநர் தமிழிசை ‘‘ கொரோனாவிலிருந்து நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் கொரோனா வைரஸ் இன்னும் நம்மை விட்டு போகவில்லை. எனவே மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உலகில் பல்வேறு நாடுகளில் குறிப்பாக சீனா, தென்கொரியா போன்ற நாடுகளில் கொரோனா தற்போது அதிகளவில் பருவி வருகிறது. ஓர் ஆண்டுகளுக்கு பிறகு சீனாவில் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதே போன்று, தென்கொரியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 6 லட்சமாக பதிவாகியுள்ளது. எனவே, நாம் அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் பேசினார். 

முக்கியமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். உலகத்திலேயே வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு 12வயதில் இருந்து 14 வயது வரை உள்ள சிறார்களுக்கு இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வயதானவர்கள், 30 வயதை கடந்தோர் எப்படி ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டோர்களே அதேபோல, தங்கள் வீட்டிலுள்ளவர்களை அழைத்துக்கொண்டு தடுப்பூசியை செலுத்துவது என்பது நம் அனைவரின் கடமையாகும்.

மேலும் படிக்க: அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகும் மழை... 17 மாவட்டங்களுக்கு அலர்ட்!!

புதுச்சேரி மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நாங்கள் சந்தித்து பேசியுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் எல்லாவித உதவிகளையும் செய்து கொண்டுப்பதாக தெரிவித்துள்ளதாக கூறினார். உக்ரேனில் உள்ள மாணவர்களை மீட்க இந்திய வெளியுறவுத்துறை எப்படி எல்லா முயற்சிகளை மேற்கொண்டதோ, அதேபோல, மீனவ சகோதரர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அதற்காக பிரதமருக்கும் வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றார்.

முன்னதாக பாலமுருகன் கோயிலுக்கு வந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க: மக்களே அலர்ட்..! இதை செய்யலனா வாகனங்கள் பறிமுதல்.. இதுவரை 2,306 வாகனங்கள் மீது வழக்கு..

click me!