கர்நாடகா மாநிலம் பெலகாவில் மாட்டம் சார்லிராய் நகரைச் சேர்ந்த ஒரு நபரை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்காக போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸின் மாறுபாடான ஒமிக்ரான் வைரஸ் தொற்று தற்போது உலக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கர்நாடகாவில் தான் 2 நோயாளிகளுக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. ஆனால் தற்போது இவை பல மடங்காக பெருகியதோடு நாட்டிலுள்ள 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இவை பரவியுள்ளது.
undefined
இந்தியாவில் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்ட மாநிலங்கள் குறித்து ஆராய்கையில் டெல்லி இரண்டாமிடத்தில் உள்ளது தெரிகிறது. அங்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 108 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் டெல்லியில் 79 பேர், குஜராத்தில் 43 பேர், தெலங்கானாவில் 41பேர், கேரளாவில் 38 பேர் , கர்நாடகாவில் 31 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்குவங்கத்தில் 6 பேரும், ஹரியானா, ஒடிசா, ஆந்திராவில் தலா 4 பேரும், ஜம்மு -காஷ்மீரில் 3 பேரும் , உத்தரப்பிரதேசத்தில் 2 பேரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் இதுவரை 106 நாடுகளுக்கு பரவியுள்ளது. இதேபோல் மஹாராஷ்டிராவில் 23 பேர், குஜராத்தில், 10 பேர், தமிழகத்தில் 12 பேர், தெலங்கானாவில் 10 பேர் என ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களில் 130 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கர்நாடகா மாநிலம் பெலகாவில் மாட்டம் சார்லிராய் நகரைச் சேர்ந்த ஒரு நபரை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்காக போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு தவணை முறையாக தடுப்பூசி செலுத்தியிருந்த அந்த நபர் கொரோனா மீதான பயத்தால் 8 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார்.
9வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக சென்ற போது அவரது ஆவணங்களை ஆராய்ந்து பார்த்ததில் அவற்றில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் போலியானவை என்று சுகாதார ஊழியர்களுக்கு தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து பெலகாவி போலீசாருக்கு தகவல் தெரியபடுத்தப்பட்டது.
சம்மந்தப்பட்ட நபரை கைது செய்த காவல்துறை அவரிடம் விசாரணை மேற்கொண்டிருக்கிறது. அதில் அந்த நபர் ஏற்கெனவே போலியான ஆவணங்கள் தயாரித்து 8 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது தெரிய வந்திருக்கிறது. இருப்பினும் அவருக்கு எந்த பின்விளைவுகளும் ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.