கொரோனா வைரஸின் கடுமையான காலகட்டம் எப்போது முடியும் என்பதற்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா வைரஸின் கடுமையான காலகட்டம் எப்போது முடியும் என்பதற்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் விளக்கம் அளித்துள்ளார்.
2019ம் ஆண்டு சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் அந்நாட்டைவிட உலக நாடுகளைத்தான் கடுமையாக வதைத்து வருகிறது. இதுவரை உலகளவில் கொரோனா தொற்றால் 40 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
undefined
57.80 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு நாடுகளில் 3வது அலையும், சிலநாடுகளில் 4-வது அலையும் வீசி வருகிறது. ஆனாலும், தற்போது உலக நாடுகளில்பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ்தான் கொரோனாவின் கடைசி திரிபு என்று இதுவரை உலக சுகாதார அமைப்பு கூறவில்லை, ஆனாலும், பல மருத்துவ வல்லுநர்கள் இதுபோன்று கூறி வருகிறார்கள்.
தடுப்பூசி, முகக்கவசம், சமூகவிலகல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவைதான் கொரோனா பரவலில் இருந்து தடுக்கும் வழி என்று மருத்துவ வல்லுநர்களும், உலக சுகாதார அமைப்பும், அறிவியல் அறிஞர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ், கொரோனா வைரஸின் கடுமையான காலகட்டம் எப்போது முடியும் என்பதற்கு விளக்கம் அளி்த்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் ஆப்ரிக்கன் பயலாஜிக்ஸ் அன்ட் வேக்ஸின்ஸ் என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றபோது, அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கொரோனா வைரஸின் கடுமையான காலகட்டம் இந்த ஆண்டு நடுப்பகுதியில் அல்லது இந்த ஆண்டு இறுதியில் கூட முடிய வாய்ப்புள்ளது. ஆனால், உலகம் முழுவதும் 70 % மக்களுக்கு வரும் ஜூன் மாதத்துக்குள், அல்லது ஆண்டின் நடுப்பகுதிக்குள் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்பட்டிருந்தால்தான் இது சாத்தியமாகும்.
இது மட்டும் நிச்சயமாக நடந்துவிட்டால், கொரோனா வைரஸின் கடுமையான காலகட்டம் முடிவுக்கு வந்துவிடும் என்று நம்பலாம், இதைத்தான் எதிர்பார்க்கிறோம். ஆனால், இவை அனைத்தும் நமது கைகளில்தான் இருக்கிறது, இது வாய்ப்பைப் பொறுத்து இல்லை, தேர்வைப் பொறுத்து இருக்கிறது.
ஆப்பிரிக்காவில் முதன்முதலில் மார்டர்னா நிறுவனம் எம்ஆர்என்ஏ தடுப்பூசியைத் தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசி ஆப்பிரிக்க மக்களுக்கு சிறப்பான முறையில் பயன்படும் என்று நினைக்கிறேன். தடுப்பூசியை சேமித்து வைப்பதிலும், விலை குறைவாக விற்பனை செய்வதிலும் சிக்கல் இருக்கிறது.
வரும் நவம்பர் மாதம் கிளினிக்கல் பரிசோதனைக்கு தடுப்பூசி தயாராகி, 2024ம் ஆண்டு ஒப்புதல் வழங்கப்படலாம். உலகளவில் இதுவரை 11 % ஆப்பிரிக்க மக்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளார். இது உலகளவில் மிகமிகக் குறைவு.
ஆண்டின் நடுப்பகுதிக்குள் 70 சதவீத தடுப்பூசி இலக்கை எட்டுவதற்கு இன்னும் 6 மடங்கு தடுப்பூசி செலுத்தும் வீதத்தை, வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். இவை நடந்தால்தான், இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா வைரஸின் கடுமையான காலகட்டம் முடிவுக்கு வரும்.
இவ்வாறு டெட்ராஸ் அதானம் தெரிவித்தார்