தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 500க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 3,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 500க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 3,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 3,592 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 3,086 ஆக குறைந்துள்ளது. 1,06,514 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,086 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 590 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 663 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 590 ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 25 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,887 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 11 பேரும் தனியார் மருத்துவமனையில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் 56,002 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 14,051 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 33,37,265 ஆக உள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 654 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 569 ஆக குறைந்துள்ளது. அதே போல் செங்கல்பட்டில் 290 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 261 ஆக குறைந்துள்ளது. திருப்பூரில் 221 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 193 ஆக குறைந்துள்ளது. ஈரோடு 154, சேலம் 165, திருவள்ளூர் 125, கன்னியாகுமரி 75 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.