ஒமைக்ரானால் நுரையீரல் செல்கள் அதிகம் பாதிக்கலாம்..இன்னும் புதுவகை வைரஸ் தோன்றலாம்..மருத்துவர்கள் எச்சரிக்கை

By Thanalakshmi V  |  First Published Jan 7, 2022, 9:22 PM IST

புதிதாக உருமாறியுள்ள ஒமைக்ரான் வைரஸ் லேசான பாதிப்பு கொண்டது அல்ல என்றும் நுரையீரல் செல்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


கடந்த 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா ப்ளஸ் என்று பல்வேறு உருமாற்றங்களை அடைந்து தொடர்ந்து இயல்பு நிலைக்கு திரும்பவிடாமல் தாக்கி வருகிறது. தற்போது தென் ஆப்பிரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளது. டெல்டா போன்று அதிக பாதிப்புகளை இந்த ஒமைக்ரான் ஏற்படுத்தாது என்று கூறப்பட்டாலும், தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு, ஒமைக்ரான் குறித்து எச்சரித்து வருகிறது. இந்நிலையில் ஒமைக்ரான் திரிபு லேசான பாதிப்பு கொண்டது அல்ல என்று இந்திய வம்சாவளி விஞ்ஞானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ நுண்ணுயிரியல் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் ரவீந்திர குப்தா. இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த விஞ்ஞானி ஆவார். ஒமைக்ரான் குறித்து அவர் கூறுகையில், “ஒமைக்ரான் வைரஸ் கொஞ்சம் வலிமை குறைந்தது போன்று எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால் சார்ஸ் வகையைச் சேர்ந்த கொரோனா வைரஸ் ஒருபோதும் மென்மையானதாக மாறப்போவதில்லை.ஒமைக்ரான் பரவலால் மேலும் சில புதிய வகை கொரோனா தோன்றும் வாய்ப்புகள் உள்ளன. இந்த புதிய வகை இன்னும் தீவிர தன்மை கொண்டதாக இருக்கும் அபாயம் உள்ளது. இந்தியாவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இருப்பினும், பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவலின் மூன்றாவது அலை எப்போது முடிவிற்கு வரும் என்பது தொடர்பாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வை பெங்களூருவிலுள்ள ஐஐஎஸ்சி (Indian Institute of Science)மற்றும் ஐஎஸ்ஐ அமைப்புகள் சேர்ந்து நடத்தியது. அந்த ஆய்வின்படி, இந்தியாவில் கொரோனா பரவலின் மூன்றாவது அலை வரும் ஜனவரி கடைசி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் உச்சத்தை தொடும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனா பரவல் உச்சத்திற்கு வரும் நாட்கள் மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மற்றும் கொரோனா தடுப்பூசி விகிதம் பொருத்து மாறலாம் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

இதனிடையே 2021 டிசம்பர் 27-ம் தேதி முதல் 2022 ஜனவரி 2-ம் தேதி வரையிலான உலக அளவிலான கொரோனா தொற்று குறித்த அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் கடந்த வாரத்தில் உலக அளவில் கொரோனா பரவல் திடீரென 71 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், உயிரிழப்பு 10 சதவீதம் குறைந்துள்ளது.உலக அளவில் புதிதாக 95 லட்சம் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று வாராந்திர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

click me!