கவனம்..படுமோசமாக இருக்குமாம்: புதிதாக உருமாறும் கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

By manimegalai a  |  First Published Feb 9, 2022, 2:33 PM IST

கொரோனா வைரஸின் கடைசி உருமாற்றம் ஒமைக்ரான் கிடையாது. அடுத்துவரும் உருமாற்ற வைரஸின் விளைவு படுமோசமானதாக இருக்கக்கூடும், மக்கள் கவனத்துடன் இருந்து கொரோனா தடுப்பு வழிகளைப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதாரஅமைப்பு எச்சரித்துள்ளது


கொரோனா வைரஸின் கடைசி உருமாற்றம் ஒமைக்ரான் கிடையாது. அடுத்துவரும் உருமாற்ற வைரஸின் விளைவு படுமோசமானதாக இருக்கக்கூடும், மக்கள் கவனத்துடன் இருந்து கொரோனா தடுப்பு வழிகளைப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதாரஅமைப்பு எச்சரித்துள்ளது

2019ம் ஆண்டு சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் அந்நாட்டைவிட உலக நாடுகளைத்தான் கடுமையாக வதைத்து வருகிறது. இதுவரை உலகளவில் கொரோனா தொற்றால் 40 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Tap to resize

Latest Videos

undefined

57.80 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு நாடுகளில் 3வது அலையும், சிலநாடுகளில் 4-வது அலையும் வீசி வருகிறது. ஆனாலும், தற்போது உலக நாடுகளில்பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ்தான் கொரோனாவின் கடைசி திரிபு என்று இதுவரை உலக சுகாதார அமைப்பு கூறவில்லை, ஆனாலும், பல மருத்துவ வல்லுநர்கள் இதுபோன்று கூறி வருகிறார்கள்.

தடுப்பூசி, முகக்கவசம், சமூகவிலகல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவைதான் கொரோனா பரவலில் இருந்து தடுக்கும் வழி என்று மருத்துவ வல்லுநர்களும், உலக சுகாதார அமைப்பும், அறிவியல் அறிஞர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் கொரோனா வைரஸ் பிரிவின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மரியா வேன் கேர்கோவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:

கொரோனா வைரஸில் ஒமைக்ரான்தான் கடைசி உருமாற்றம் என்பது கிடையாது. அடுத்துவரக்கூடிய உருமாற்ற கொரோனா வைரஸ் தன்னை அனைத்து சூழல்களுக்கும் பொருத்தமானதாக, மனிதர்களின் நோய் எதிர்ப்பாற்றலை எதிர்கொள்ளும் விதத்தில் அதாவது வேகமாகப் பரவுவதாக இருக்கும்.

தற்போதுஇருக்கும் ஒமைக்ரானைவிட அடுத்துவரும் உருமாற்ற வைரஸ் பரவுவதில் வேகமாக இருக்கும். ஆனால், எதிர்காலத்தில் உருவாகும் வைரஸ்கள், மோசமான பாதிப்பை ஏற்படுத்துமா அல்லது ஏற்படுத்தாதா என்பதுதான் கேள்விக்குறி. அடுத்துவரும் உருமாற்ற வைரஸ் தீவிரமான தொற்றை உருவாக்கும் என நினைக்கிறோம். 

ஏற்கெனவே இருக்கக்கூடிய தடுப்பூசிகள், புதிய உருமாற்ற வைரஸ்களுக்கு எதிராக சிறப்பாகச் செயல்படவி்ல்லை. ஆதலால், அடுத்துவரக்கூடிய வைரஸும், நோய்தடுப்பாற்றலில் இருந்து தன்னை எளிதாக தப்பிக்க வைக்கும் விதத்தில் இருக்கும். இப்போதுள்ள தடுப்பூசி உயிரிழப்பு மற்றும் தீவிரபாதிப்பிலிருந்து தடுக்கிறது. ஆனால், இதேபோன்ற சூழல் உருவாக நாங்கள் விரும்பவில்லை, பரவலைத் தடுக்கவே விரும்புகிறோம்.

சரியான நேரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுத்தால் பாதிப்பு குறைத்துவிட முடியும். தடுப்பூசி செலுத்தி நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், தடுப்பூசி செலுத்தாதவர்கள் இடையே பாதிப்பு அதிகரிக்கும்

இனிவரும் காலங்களில் உலகம் குறிப்பிட்ட இடைவெளியில் இதுபோன்ற வைரஸ் உருமாற்ற பரவலைப் பார்க்கக்கூடும். ஆனால் கொரோனா வைரஸ் என்பது மற்ற வைரஸ்களைப் போல் அல்லாமல் நுரையீரலையும், சுவாசப்பாதை, சுவாசஉறுப்புகளை பாதிக்கக்கூடியது

இவ்வாறு கெர்கோவ் தெரிவித்தார்
 

click me!