கேரளத்தில் புதிதாக 42,154 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் புதிதாக 42,154 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கேரள கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ளார்.கேரள மாநிலத்தில் இன்று புதிதாக 42,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 42.40 சதவீதமாக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 38,458 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 10 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இதுவரை கொரோனா தொற்றில் உயிரிழந்தவர்களின் மொத்த பலி எண்ணிக்கை 54,395 ஆக உள்ளது.
இதனிடையே மாநிலத்தில் நிலவும் கொரோனா சூழலை ஆய்வு செய்த உயர்நிலைக் குழு கடந்த இரண்டு வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் கடைபிடிக்கப்பட்ட முழு ஊரடங்கை வரும் ஞாயிறும் பொது முடக்கத்தை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 2.86(100%) பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதில் 84 சதவீதத்தினர் 2.25 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர். 15 முதல் 18 வயதினர் 71 சதவீதத்தினர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
undefined
மாநிலத்தில் கொரோனா பாதிப்பு சதவிகிதத்தை கணக்கிட்டு ஏ, பி, சி என மூன்று பிரிவுகாக பிரித்து அதற்கு ஏற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. மாவட்டங்களில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 25 சதவிகிதத்திற்கு மேல் இருக்கும் பட்சத்தில் அந்த மாவட்டம் 'சி' பிரிவில் உட்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும். அதன்படி ஏற்கனவே திருவனந்தபுரம் மாவட்டம் 'சி' பிரிவில் உட்படுத்தப்பட்டது.
திருவனந்தபுரம் உள்பட 5 மாவட்டங்களில் கொரோனா பரவல் விகிதம் 50 சதவீதத்தை கடந்ததால் தியேட்டர்கள் நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்தது. மேலும் கடந்த 7 நாட்களில் 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 94 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.