4th Wave In India: ஜூன் மாதத்தில் கொரோனா 4வது அலை..? எச்சரிக்கும் நிபுணர்கள்.. பீதியில் மக்கள்..!

By Raghupati R  |  First Published Mar 27, 2022, 6:18 AM IST

 ஜூன் மாதத்தில் கொரோனா 4-வது அலை பரவ வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


ஆட்டிப்படைக்கும் கொரோனா :

உலக மக்களை கடந்த 2 ஆண்டு காலமாக தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது கொரோனா வைரஸ். உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலக நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் டெல்டா கொரோனா பாதிப்பினால் தடுமாறி வருகின்றன. தற்போது உலகம் முழுவதிலும் கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. 

Latest Videos

undefined

இந்த நிலையில் டெல்டா போய் ஓமிக்ரான் எனும் புதிய வேரியண்ட் பரவி வருகிறது. இது பல நாடுகளில் மூன்றாவது அலை, நான்காவது அலை தீவிரமடைய காரணமாகியுள்ளது.தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் ஜூன் மாதத்தில் கொரோனா 4-வது அலை பரவ வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

கொரோனா 4வது அலை :

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மச.சுப்பிரமணியனும் இதனை உறுதி செய்துள்ளனர்.  இந்தியாவில் நான்காவது அலைக்குக் காரணம் டெல்டாக்ரான் அல்ல, ஓமிக்ரான் துணை வேரியண்டே என்றும் நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். இதன்படி, பல வெளிநாட்டு ஆய்வுகளின்படி, ஓமிக்ரான் துணை மாறுபாடு BA.2 இரண்டு சிறப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. 

மருத்துவ நிபுணர்கள் கூறுவது என்ன ? :

தலைச்சுற்றல் மற்றும் தீவிர சோர்வு உட்பட கொண்டிருக்கும். இது தவிர, கொரோனாவின் இந்த மாறுபாடு வயிறு மற்றும் குடலில் அதிகம் பாதிக்கிறது. இதன் காரணமாக வாந்தி, வயிற்று வலி, நெஞ்செரிச்சல், பசியின்மை, முதுகுவலி, வயிற்றுப்போக்கு, குடல் வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்படலாம். அதே நேரத்தில், கொரோனாவின் பின்வரும் பொதுவான அறிகுறிகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும். 

மூச்சுத்திணறல், காய்ச்சல்,உடல் வலி, தொண்டை வலி,சுவை இழப்பு,இருமல்,தலைவலி, போன்றவை வரும் என்றும் கூறப்படுகிறது.  ஏற்கவே கடந்த காலங்களில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பில் இருந்து பெறப்பட்ட தடுப்பு ஆற்றல், வேக்சின் தடுப்பாற்றல் ஆகியவை வைரஸ் பரவலை வெகுவாக கட்டுப்படுத்தும். 

வேக்சின் தரும் ஆன்டிபாடிகள் குறிப்பிட்ட காலத்தில் குறையத் தொடங்குவது நமக்கு தெரியும். ஆனால், ஹைபிரிட் தடுப்பாற்றல் என்பது பல மாதங்கள் ஆனாலும் தொடரும் என்பதால் புதிய உருமாறிய கொரோனா இப்போதைக்குப் பிரச்சினை இல்லை என்றும் மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

click me!