India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 21,566 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுக்குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 21,566 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நேற்று 20,557 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 21,566 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,38,25,185ஆக அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க:இன்றைய கொரோனா நிலவரம்… தமிழகத்தில் இன்று 2,116 பேருக்கு தொற்று!!
undefined
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 18,294 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,31,50,434 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்போர் எண்ணிக்கை 1,48,881 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் படிக்க:அதிகரிக்கும் கொரோனா.. மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு !
நாட்டில் இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5,25,870 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா உயிரிழப்பின் விகிதம் 1.20 % ஆக உள்ளது. அதே போல் சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.34 % ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.46 % ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 200.91 கோடிக்கு அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 29,12,855 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.