தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 100ஐ தாண்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 98 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 139 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 100ஐ தாண்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 98 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 139 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 98 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 139 ஆக அதிகரித்துள்ளது.
undefined
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 59 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,025 ஆகவே உள்ளது.
கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சற்றே அதிகரித்து வரும் நிலையில் தற்போது மீண்டும் 100-ஐ கடந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 629 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 52 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,16,959 ஆக உள்ளது.
இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 2,745 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் நாட்டில் மொத்தம் 18,386 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்ந 24 மணி நேரத்தில் 2,236 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் 193.57 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Corona : ஒரே நாளில் 2,745 பேருக்கு கொரோனா பாதிப்பு.. அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்.. அதிர்ச்சி தகவல்