தனியார் பள்ளியில் ஒரு மாணவர், ஆசிரியருக்கு கொரோனா... அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?

By Kevin Kaarki  |  First Published Apr 14, 2022, 1:49 PM IST

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதை அடுத்து பள்ளி உடனடியாக மூடப்பட்டு, பள்ளி மாணவர்கள் விரைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். 


டெல்லியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் மாணவர் மற்றும் ஆசிரியருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதை அடுத்து பள்ளி உடனடியாக மூடப்பட்டு, பள்ளி மாணவர்கள் விரைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். 

தனியார் பள்ளி ஒன்றில் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில நாட்களாக நொய்டா மற்றும் காசியாபாத் பகுதிகளில் இயங்கி வரும் பள்ளிகளிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

Tap to resize

Latest Videos

undefined

அதிகரிக்கும் கொரோனா:

சமீபத்தில் தான் டெல்லியில் 299 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் டெல்லியில் அதற்கு முந்தைய நாளுடன் ஒப்பிடும் போது கொரோனா வைரஸ் தொற்று 50 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இதன் மூலம் டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 18 லட்சத்து 66 ஆயிரத்து 881 ஆக உயர்ந்து இருக்கிறது.

"மாணவர் மற்றும் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மற்ற மாணவர்கள் அனைவரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டனர். அங்குள்ள சூழ்நிலையை உற்று கவனித்து வருகிறோம்," என ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், மூத்த தலைவருமான அடிஷி தெரிவித்து இருக்கிறார். 

பள்ளிகள் மூடல்:

முன்னதாக நொய்டா பகுதியில் இயங்கி வரும் நான்கு பள்ளிகளை சேர்ந்த சுமார் 23 பள்ளி மாணவர்களுக்கு கடந்த மூன்று நாட்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதை அடுத்து பள்ளிகள் உடனடியாக மூடப்பட்டன. மேலும் கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகள் வெளியான போது மாணவர்கள் யாரும் பள்ளியில் இல்லை என பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

புது வேரியண்ட்:

சமீபத்தில் ஒமிக்ரான் தொற்றின் மற்றும் இரண்டு துணை வேரியண்ட்கள் கண்டறியப்பட்டன. புது வேரியண்ட்கள் ஒமிக்ரான் BA. 4 மற்றும் BA. 5 என அழைக்கப்படுகின்றன. ஒமிக்ரான் BA. 4 மற்றும் BA. 5 வகை தொற்று வகைகள் தென் ஆப்ரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்டன. முற்றிலும் புது வகை வைரஸ் தொற்று பற்றி உலக சுகாதார மையம் ஆய்வு செய்ய தொடங்கி இருக்கிறது.

click me!