எங்களுக்கு தகவல் கிடைத்தால், பள்ளிகளை உடனடியாக மூட அறிவுறுத்துவோம். தற்போதைய சூழலில் யாரும் பதற்றமும் அடைய வேண்டாம்.
உத்திர பிரதேச மாநிலத்தின் நொய்டா பகுதியில் இயங்கி வரும் நான்கு பள்ளிகளை சேர்ந்த சுமார் 23 பள்ளி மாணவர்களுக்கு கடந்த மூன்று நாட்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதை அடுத்து பள்ளிகள் உடனடியாக மூடப்பட்டு விட்டன. மேலும் கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகள் வெளியான போது மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வரவழைக்கப்படவில்லை என பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பள்ளி மாணவர்கள் பாதிப்பு:
undefined
"நேற்று கைத்தான் பள்ளியை சேர்ந்த 13 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பள்ளி நிர்வாகம் பள்ளியை மூடிவிட்டதாக எங்களிடம் தெரிவித்து இருக்கிறது. இதுவரை நொய்டாவை சேர்ந்த 23 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது," என கௌதம் புத்தா நகருக்கான மூத்த மருத்துவ அலுவலர் மருத்துவர் சுனில் குமார் ஷர்மா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
"சில பள்ளிகள் சார்பில் எங்களுக்கு எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எங்களுக்கு தகவல் கிடைத்தால், பள்ளிகளை உடனடியாக மூட அறிவுறுத்துவோம். தற்போதைய சூழலில் யாரும் பதற்றமும் அடைய வேண்டாம். எங்களின் ரேபிட் குழுக்கள் மாணவர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று டிரேசிங் செய்து வருகின்றனர். அறிகுறிகள் உள்ளவர்களை மட்டும் சோதனை செய்து வருகிறோம்," என அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா தொற்று விவரம்:
இந்தியாவில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு 1,088 ஆக பதிவாகி இருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 4,30,80,016 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,21,736 ஆக அதிகரித்து இருக்கிறது.
நான்காவது அலை:
இது தவிர இந்தியாவில் ஜூன் மாத வாக்கில் கொரோனா வைரஸ் பாதிப்பின் நான்காவது அலை உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. கடந்த வாரம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் XE பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. மேலும் சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் மிகத் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக ஷாங்காய் நகரில் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.