நாடு முழுவதும் 104 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் 104 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
undefined
நாடு முழுவதும் கொரோனா என்னும் பெருந்தொற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. 2வது ஆண்டாக கொரோனா பாதிப்பு பல்வேறு மாநிலங்களில் அறியப்பட்டு வருகிறது. தொடக்கத்தில், டெல்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்தது.
கொரோனா பரவலை தடுக்க மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் நடமாட்டங்கள் கட்டுபடுத்தப்பட்டன. மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.
கொரோனா அதிகம் பரவியதால் கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் சுகாதார நடவடிக்கைகள் முன் எடுக்கப்பட்டு, தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
தொடக்கத்தில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. அதன பின்னர் 60 வயதை கடந்தவர்களுக்கு போடப்பட்டன. முதல் தவணை ஊசி போடப்பிட்ட பின்னர் 2வது தவணைக்காக தடுப்பூசிகள் தட்டுப்பாடு ஏற்பட்டதால் தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
பின்னர் தடுப்பூசி போடும் பணிகள் விரிவுபடுத்தப்பட்டு விழிப்புணர்வு பிரச்சாரங்களும் முன் எடுக்கப்பட்டன. 44 வயது கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன் பிறகு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டது. தொடக்கத்தில் தடுப்பூசி போடும் மக்களின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதாக அறியப்பட்டது. நாட்கள் நகர, நகர பெரும்பாலோனோர் தடுப்பூசி போடுவதில் அதிக ஆர்வம் காட்டினர்.
இதன் மூலம் தடுப்பூசிகளின் உற்பத்தியும் முன்பை விட அதிகரிக்கப்பட்டது. மாநிலங்களுக்கும் கூடுதல் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந் நிலையில் நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக 104 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டு உள்ள விவரம் வருமாறு: நாடு முழுவதும் 104,73,52,837 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன. அவற்றில் முதல் தவணையாக 41,44,72,586 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இரண்டாம் தவணையாக 13,62,06,857 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன.
45 வயது 59 வயது உள்ளோருக்கு முதல் தவணையாக 173753422 தடுப்பூசிகளும், 2ம் தவணையாக 94407597 தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன, 60 வயதுக்கு மேல் முதல் தவணையாக 109104471 தடுப்பூசிகளும், 2ம் தவணையாக 65608593 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு உள்ளன.