கொரோனா தடுப்பூசி போட்டால் எய்ட்ஸ் வந்துவிடும் என்று பிரேசில் அதிபர் ஜெர் போல்ஸ்னோரா கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டால் எய்ட்ஸ் வந்துவிடும் என்று பிரேசில் அதிபர் ஜெர் போல்ஸ்னோரா கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
undefined
உலகம் முழுக்க பரவி உள்ள கொரோனாவின் தாக்கம் இன்னமும் குறைந்தபாடில்லை. கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட நாடுகளை 2வது ஆண்டாக போட்டு புரட்டி எடுத்து வருகிறது.
கொரோனா மீண்டும் சீனாவில் படுவேகமாக பரவ ஆரம்பிக்க அந்நாடு சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. உலக நாடுகளில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் வேகம் எடுத்து வருகின்றன.
இந் நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டால் எய்ட்ஸ் வரும் என்று பிரேசில் அதிபர் போல்ஸ்னோரா கூறி இருக்கிறார். அவர் இவ்வாறு பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அவரது இந்த சர்ச்சை கருத்து உலக நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. போல்ஸ்னோராவின் இந்த கருத்து அபத்தமானது என்று அறிவியலாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
எதிர்ப்புகள் அதிகமான நிலையில் போல்ஸ்னோராவின் வீடியோவை பேஸ்புக் நிறுவனம் அதிரடியாக நீக்கி உள்ளது. ஆனாலும் அவரது பேச்சு பற்றிய கருத்துகள் இன்னமும் ஓய்ந்தபாடில்லை.