Corona India:இரண்டாவது நாளாக குறைந்த கொரோனா..இன்று ஒரே நாளில் 3.33 லட்சம் பேர் பாதிப்பு..

By Thanalakshmi V  |  First Published Jan 23, 2022, 3:11 PM IST

நாட்டில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து 2ஆவது நாளாக குறைந்துள்ளது.
ஒன்று ஒரே நாளில் 3.33 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
 


மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி 3,33,533 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 46,393 பேரும் கேரளாவில் 45,136 பேரும் கர்நாடகாவில் 42,470 பேரும் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். தொற்று அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 4ஆவது இடத்தில் உள்ளது. நாடெங்கும் 2,59,168 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 21,87,205ஐ தொட்டுள்ளது. இதுவரை 161கோடியே 47 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிற்கு 525 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,89,409 ஆக அதிகரித்துள்ளது.தினசரி பாசிடிவிட்டி விகிதம் 17.78% என்றளவில் உள்ளது. நேற்று 3,37,704 பேர் புதிதாக பாதிக்கப்பட்ட நிலையில் இன்று கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. கடந்த 21 ஆம் தேதி நிலவரப்படி 3.47 லட்சம் பேருக்கும், நேற்று நிலவரப்படி 3.37 லட்சம் பேருக்கும் , இன்று நிலவரப்படி 3.33 லட்சம் பேருக்கும் எனும் விகிதத்தில் கொரோனா பாதிப்பு இறங்கு முகத்தில் பதிவாகி வருகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 30,744பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய நாள் பாதிப்பு 29,870 ஆக இருந்த நிலையில் மேலும் 874 அதிகரித்து புதிதாக 30,744 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  1,55,648 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 30,744 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 6452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 7,038 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கொரோனா எண்ணிக்கை 6452 ஆக குறைந்துள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 6452 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 30,718 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 26 பேர் என 30,744 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 30,744 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 6452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 7,038 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் கொரோனா எண்ணிக்கை 6452 ஆக குறைந்துள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 6452 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 30,718 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 26 பேர் என 30,744 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

click me!