சிதம்பரத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு தோற்று பரவிதை அடுத்து அந்த தெரு முற்றிலும் அடைக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு தோற்று பரவிதை அடுத்து அந்த தெரு முற்றிலும் அடைக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவும் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 29,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 28,561 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 1,309 அதிகரித்து 29,870 ஆக பதிவாகியுள்ளது. 1,54,282 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 29,870 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 29,870 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 33 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,145 ஆக உள்ளது.
undefined
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,87,358 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 1,79,205ல் இருந்து 1,87,358 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 21,684 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 28,48,163 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்திற்குள் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டுமே 281 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 40 பேர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவக் கல்லூரி விடுமுறை விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொற்று பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக சிதம்பரம் நகரத்திலும் உயர்ந்து வந்தது.
மார்க்கெட் மால் வணிக நிறுவனங்கள் என மக்களின் கூட்டமும் அதிகரித்தால் தொற்று பரவும் வேகம் எடுத்தது. இந்நிலையில் நேற்றைய நிலையில் சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மட்டுமே 281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிதம்பரம் மாலை கட்டி தெருவில் ஒரே குடும்பத்தில் 5 பேர், எதிர்வீட்டில் 3 பேர் உட்பட 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த தெருவை கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவித்து நகராட்சி ஊழியர்கள் அடைத்து அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இதனால் சிதம்பரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் கவனமாகவும் பாதுகாப்புடனும் இருக்க சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.