கொரோனா பிடியில் சிக்கிய விண்வெளி ஆராய்ச்சி மையம்... 357 பேருக்கு தொற்று!!

By Narendran S  |  First Published Jan 20, 2022, 9:44 PM IST

ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் ஒரேநாளில் 12,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 14,527 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 20.71 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 53,871 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை அடுத்து ஆந்திர மாநில சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தை விட ஆந்திராவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

Tap to resize

Latest Videos

undefined

இந்த நிலையில் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 357 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியக் கூடிய விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்கள் பொங்கல் பண்டிகையை ஒட்டி அவரவர் சொந்த ஊருக்கு சென்றனர். விடுமுறை முடிந்து அனைவரும் பணிக்குத் திரும்பிய நிலையில் பலருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இதை அடுத்து அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் முதற்கட்ட முடிவின் 97 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் அடுத்தக்கட்ட முடிவில் மேலும் 152 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் இரண்டு நாட்களில் 256 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் விடுமுறை முடித்து வரக்கூடிய அனைவருக்கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகு ஆராய்ச்சி மையத்தில் அனுமதிக்க வேண்டும் எனவும் 50 சதவீத பணியாளர்களுடன் ஏற்கனவே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக இந்த மாத இறுதியில் விண்ணில் செலுத்தப்பட உள்ள  ஜி.பி.எஸ். தொழில்நுட்ப செயற்கைக்கோள் மற்றும் ககன்யான் திட்ட பணிகள் காலதாமதம் ஆவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே தற்போது மேலும் 101 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 357 ஆக அதிகரித்துள்ளது.

click me!