TN Corona: தவிக்கும் தமிழகம்… 29 ஆயிரத்தை நெருங்கும் ஒருநாள் பாதிப்பு… அதிகரிக்கும் கொரோனாவால் மக்கள் அச்சம்!!

By Narendran S  |  First Published Jan 20, 2022, 8:17 PM IST

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 


தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 28,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 26,981 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 1,580 அதிகரித்து 28,561 ஆக பதிவாகியுள்ளது. 1,54,912 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 28,561 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 28,561 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 7,520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 8,007 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து 7,520 ஆக குறைந்துள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 7,520 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 28,547 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 14 பேர் என 28,561 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 39 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,112 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 20 பேரும் தனியார் மருத்துவமனையில் 19 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,79,205 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 1,70,661ல் இருந்து 1,79,205 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 19,978 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 28,26,479 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 2,194 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 2,196 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் கோவையில் 3,082 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 3,390 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூரில் 914 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 998 ஆக அதிகரித்துள்ளது.

Tap to resize

Latest Videos


திருப்பூரில் 756 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 897 ஆக அதிகரித்துள்ளது. ஈரோட்டில் 906 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 919 ஆக அதிகரித்துள்ளது. கன்னியாகுமரியில் 1,008 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,148 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் 732 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 718 ஆக அதிகரித்துள்ளது. தஞ்சையில் 459 ஆக ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 544 ஆக அதிகரித்துள்ளது. நெல்லையில் 713 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 756 ஆக அதிகரித்துள்ளது. சேலத்தில் 785 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 937 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரத்தில் 718 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 738 ஆக அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரியில் 638 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 684 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் திருச்சி 639, கடலூர் 505, தி.மலை 518, விருதுநகர் 550, நாமக்கல் 527 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

click me!