புதுச்சேரியில் தினசரி கொரோனா பாதிப்பு 500 க்கும் கீழ் குறைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுத்தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ள தகவலில், புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் 431 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து புதுச்சேரியில் ஒட்டுமொத்த பாதிப்பு 1,63,563 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இன்று ஒரே நாளில் 2686 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 431 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் புதுச்சேரியில் 279 பேருக்கும், காரைக்கால் 109 பேருக்கும், யானம் 34 பேருக்கும் மற்றும் மாஹேயில் 9 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
undefined
இன்று ஒரே நாளில் கொரோனா நோய்தொற்றிற்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மொத்த உயிரிழப்பு 1946 ஆக உள்ளது. தற்போது கொரோனா சிகிச்சையில் மருத்துவமனையில் 115 பேரும் வீடுகளில் 5,343 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மொத்தமாக 5458 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 1608 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,56,159 ஆக உள்ளது. புதுவையில் இதுவரை 21,71,924 மாதிரிகள் பரிசோதித்துள்ளதாகவும் அதில் 18,19,675 மாதிரிகள் நெகட்டிவ் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் 15,40, 256 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.