India corona:அதிர்ச்சி..! மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சம்..ஒரே நாளில் 1.49 லட்சம் பேருக்கு கொரோனா..

By Thanalakshmi V  |  First Published Feb 4, 2022, 2:58 PM IST

நாட்டில் இன்று ஒரே நாளில் 1.49 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.
 


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,49,394 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முன்னதாக நேற்றைய தினம் 1,72,433 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்திருந்த நிலையில், பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. நேற்றை விட தொற்று பாதிப்பு இன்று 13% குறைந்துள்ளது.

கொரோனாவிலிருந்து மீள்வோர் எண்ணிக்கை 2.5 லட்சத்தையொட்டி அமைந்து வருகிறது. அந்தவகையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,46,674 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை இந்தியாவில் 4,00,17,088 என்றாகியுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

மேலும் தற்போது சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 14,35,569 என குறைந்துள்ளது. இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 95.39% என்றும், சிகிச்சையிலிருப்போர் விகிதம் 3.42% என்றும் உள்ளது.இந்தியாவில் தினசரி கொரோனா உறுதியாவோரின் எண்ணிக்கை விகிதம், 9.27% என்றாகியுள்ளது. நேற்றைய தினம் 10.99% என்றிருந்தது. 

நேற்றைய தினம் 16,11,666 கொரோனா பரிசோதனைகள் செயப்பட்டுள்ளன.கொரோனா உயிரிழப்பை பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் 1,072 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று 1,008 பேர் உயிரிழந்த நிலையில் இன்று அது சற்று அதிகரித்திருக்கிறது. இறப்பு விகிதம், 1.19% என்றுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,00,055 என்று உயர்ந்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 55,58,760 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை இந்தியாவில் 168.47 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையோடு சேர்த்து பார்க்கையில், இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. இதன்மூலம், உலகளவில் 5 லட்சத்தை கடந்த கொரோனா உயிரிழப்புகளை பதிவு செய்த மூன்றாவது நாடாகிறது இந்தியா. இந்தியாவுக்கு முன், அமெரிக்கா (9 லட்சத்துக்கும் மேலான இறப்புகள்), பிரேசில் (6.3 லட்சத்துக்கும் மேலான இறப்புகள்) ஆகிய நாடுகளில் அதிக இறப்புகள் பதிவாகியுள்ளன. 

click me!