மிரட்டும் கொரோனா.. இன்று ஒரே நாளில் 12,781 பேருக்கு தொற்று.. இன்றைய பாதிப்பு நிலவரம்..

Published : Jun 20, 2022, 10:48 AM IST
மிரட்டும் கொரோனா.. இன்று ஒரே நாளில் 12,781 பேருக்கு தொற்று.. இன்றைய பாதிப்பு நிலவரம்..

சுருக்கம்

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12,781 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் மொத்தம் கொரோனா பாதிப்பினால் 76,700 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,781 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  4,33,09,473 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 8,537 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,27,07,900 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.61 சதவீதமாக உள்ளது. 

அச்சறுத்தும் கொரோனா: 

தற்போது கொரோனா பாதிப்பினால் 76,700 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம்  0.18 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,24,873 ஆக உள்ளது. நாட்டில் உயிரிழந்தோர் விகிதம் 1.21 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 196.18 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,80,136 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
 

மேலும் படிக்க: Alert : தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. இன்று முதல் கட்டுப்பாடுகள் அமல்.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சீனாவை பயமுறுத்தும் புதிய கொரோனா வைரஸ்.. XBB வேரியண்ட் இந்தியாவிற்கும் பரவுமா?
குட் நியூஸ்!.. கொரோனா தொற்று இனி அவசரநிலை கிடையாது.. WHO வெளியிட்ட சூப்பர் தகவல்