தேனியில் ஒரே பள்ளி மாணவர்கள் 31 பேருக்கு கொரோனா..! பள்ளியை மூடிய அதிகாரிகள்..அதிர்ச்சியில் பெற்றோர்..

By Ajmal Khan  |  First Published Jul 8, 2022, 8:10 AM IST

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 12 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அதிகரிக்கும் கொரோனா

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில்,  தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.இந்தநிலையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் 2765 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. நேற்று வரை 18 ஆயிரத்து 378 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்தநிலையில்  தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos

undefined

எகிறி அடிக்கும் கொரோனா.. 18 ஆயிரத்தை கடந்த பாதிப்பு.. மீண்டும் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள்..

பள்ளி மாணவர்களை தாக்கும் கொரோனா

தேனி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது.தமிழக அரசின் மாவட்ட நிர்வாகமும் கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இருந்த போதும் ஆண்டிபட்டி நகரில், கடைவீதி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் காய்ச்சல் மற்றும் சளியால் அவதியடைந்து வந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறையினர் அந்தப் பள்ளியில் நேற்று முதற்கட்டமாக 78 குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது அதில்,  இதில் 12 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது தெரியவந்தது.அதில் 6ம் வகுப்பு படிக்கும் 5 பேர், 7ம் வகுப்பு படிக்கும் 4 பேர், 8ம் வகுப்பு படிக்கும் 3 பேர் என மொத்தம் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

உஷார் !! இந்தியாவில் புது வகை ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிப்பு.. WHO வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

பள்ளி மாணவர்கள் 31 பேருக்கு கொரோனா

கொரோனா தொற்று உறுதியான குழந்தைகள் அவர்களது வீட்டிலேயே தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து பள்ளி மூடப்பட்டு மற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோரிடம்  சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நேற்று 12 மாணவ மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இன்று 19 மாணவ,மாணவிகள் மற்றும் 9 பெற்றோர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது இதனால் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர் பீதி அடைந்துள்ளனர். இதுதவிர ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் கொரோனா பரிசோதனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரே பள்ளி மாணவர்கள் 31  பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று ஒருவர் உயிரிழப்பு... 2,765 பேருக்கு தொற்று!!

 

click me!