
காரணமே அறிவிக்கப்படாமல் சுமார் ஆறு மாதங்களுக்கு மேல் பெண்டிங்கில் கிடந்த விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’படம் குறித்த புதிய அப்டேட்ஸ் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதியின் அடுத்த ரிலீஸ் இந்த மாமனிதன் தான் என்பதும் இதன்மூலம் உறுதியாகியுள்ளது.
’தர்மதுரை’ படத்தின் வெற்றிக்குப்பின் சீனு ராமசாமி இயக்கத்தில் நான்காவது முறையாக விஜய் சேதுபதி நடித்துவரும் படம் ’மாமனிதன்’. இப்படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த குழந்தை நட்சத்திரமான மானஸ்வி இப்படத்திலும் நடித்துள்ளார். கம்மட்டிப் பாடம் படத்தில் நடித்த மணிகண்டனும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
விஜய் சேதுபதி ஆட்டோ ஓட்டுனராக இப்படத்தில் நடித்திருக்கிறார். தேனி, கேரளா போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்த மாமனிதன் பிப்ரவரி மாதமே படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டன. தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக சீனு ராமசாமி கூறியுள்ளார். மேலும் மாமனிதன் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.இளையராஜா-யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் படத்திற்கு யுவனே தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்த படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
ஒரே நேரத்தில் விஜய் சேதுபதியின் மூன்று நான்கு படங்கள் தொடர்ந்து தயாராக இருந்து வந்ததால் இதுவரை ‘மாமனிதன்’படத்தை ரிலீஸ் பண்ண யுவன் மிகவும் யோசித்து வந்ததாகவும் தற்போது விஜய் சேதுபதியின் மற்ற படங்கள் துவக்க நிலையில் இருப்பதால் அடுத்த ரிலீஸாக மாமனிதன் வரும் என்றும் சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.