
சினிமாவில் நடித்து சாதிக்க வேண்டும் என பலர் ஊரை விட்டு ஓடிவந்து, ஜெயித்தவர்களும் உண்டு, தோற்றவர்களும் உண்டு... ஆனால் இவர்கள் சினிமாவில் நடிப்பதற்கு முன், கிடைத்த வேலையை செய்துக் கொண்டு சினிமா கனவை நிஜமாக்கப் போராடுவார்கள்.
இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக பணிபுரிந்து வருபவர் இளம் நடிகர் பாரி நாகராஜூ நரேந்தர். ஆரம்ப காலத்தில் பிரபல தனியார் ஸ்டுடியோ ஒன்றில் தயாரிப்பு குழுவில் பணியாற்றிய இவர் பின் பிரபலமாக அறியப்பட்டு நடிகராக மாறியவர்.
இவர் நடிகராக அறிமுகமாகியதும், இவருடைய வாழக்கை தரம் உயர்ந்தது. அதோடு குடிப்பழக்கதிற்கும் அடிமையானார்.
தற்போது இவரை போலீசார் திருட்டு சம்பவத்திற்காக கைது செய்துள்ளனர். இது குறித்து வெளியாகியுள்ள தகவலில், இவர் அதிகபடியாக பணம் வேண்டும் என்கிற ஆசையில் கடந்த இரண்டு வருடத்தில் மட்டும் 16 நகை கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாராம். இவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் இவரை சில மாதங்களாக கண்காணித்து வந்த போலீசார். இவர் நகை கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்ததும் இவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் இவரிடம் இருந்து 14 லட்சம் மதிப்புள்ள தங்க நகை மற்றும் வெள்ளி நகைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
வளர்ந்து வரும் இளம் நடிகர் ஒருவர் இப்படி திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.