
பிரபல வானொலியில் ஆர்.ஜே வாக இருந்து சின்னத்திரையில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள்' சீரியல் மூலம் நடிகராக மாறியவர் ரமேஷ் திலக். இதைத்தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் சிறு கதாப்பாத்திரத்தில் நடிக்க துவங்கி தற்போது வெள்ளித்திரையில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக உள்ளார்.
இவருக்கும் இவருடைய காதலி ஆர்.ஜே.நவலட்சுமிக்கும் இந்த மாதம் 4ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தை தொடர்ந்து படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார் ரமேஷ் திலக்.
மேலும் தங்களுடைய காதல் திருமணம் குறித்து இவர்கள் இருவரும் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர். இப்படி கொடுத்த ஒரு பேட்டியில் நடிகர் ரமேஷ் திலக்கிற்கு பிடித்தது பிடிக்காதது என்ன என்பதை கூறியுள்ளார் நவலட்சுமி.
இதுகுறித்து அவர் கூறுகையில்... ரமேஷ் திலக் மிகவும் பாசிட்டிவான மனிதர், தன் பக்கத்தில் உள்ள அனைவரையும் எப்போதும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர், குறிப்பாக நான் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பார். அதே போல் தொழி மீது அதிகம் பக்தி கொண்டவர் என தெரிவித்துள்ளார்.
மேலும் இவரிடம் பிடிக்காதது என்றால் மிகவும் அதிகமாக கோவப்படுவார் அது மட்டும் தான் தனக்கு சுத்தமாக பிடிக்காது என தெரிவித்துள்ளார் நவலட்சுமி.... இதை கூறியதும் கோவம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என சொல்லி சிரித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.