பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறப்போவது யார்? வெளியான பரபரப்பு தகவல்..!

Published : Oct 31, 2020, 11:30 AM IST
பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறப்போவது யார்? வெளியான பரபரப்பு தகவல்..!

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சி, பல்வேறு பிரச்சனைகள், வாக்கு வாதங்கள், எதிர்பாராத உறவுகள், கோவம், பாசம் என... அனைத்தும் கலந்த கலவையாக விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதே போல் டாஸ்குகளும் சூடு பிடித்து வருகிறது.  

பிக்பாஸ் நிகழ்ச்சி, பல்வேறு பிரச்சனைகள், வாக்கு வாதங்கள், எதிர்பாராத உறவுகள், கோவம், பாசம் என... அனைத்தும் கலந்த கலவையாக விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதே போல் டாஸ்குகளும் சூடு பிடித்து வருகிறது.

கடந்த வாரம், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்ல இருந்த ஆஜித் தன்னுடைய எவிக்ஷன் ஃப்ரீ பாசை வைத்து தம்பித்து விட்டார். ஆனால் இந்த வாரம் கண்டிப்பாக ஒரு போட்டியாளர் வெளியே செல்வது உறுதி. அதிலும் இந்த முறை, அதிகபட்சமாக 11 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்றுள்ளதால் யார் வெளியேறுவார் என்கிற குழப்பம் மக்கள் மத்தியில் உள்ளது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இன்றைய தினம் மிகவும் குறைவான வாக்குகள் பெற்று பிரபல கிராமிய பாடகர் வேல்முருகன் வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது. இவர் மிகவும் சுவாரஸ்யமான கன்டென்ட் கொடுக்காமல், எந்த ஒரு விஷயத்திற்கும் பம்மிக்கொண்டே இருப்பதால் இவருக்கு மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஓரிரு தினத்திற்கு முன், பாலா தூங்கிய பிரச்சனை வந்த போது கூட, ஒரு அணியின் கேப்டனாக இருந்தும்... அவர் பாலா கூறிய விஷயத்தை அனைவர் மத்தியிலும் ஒளித்து மறைத்து தான் வெளிப்படுத்தினார். அசதியில் தூங்கியவரை வேலை வாங்கியதற்கு பலர் தங்களுடைய கண்டனத்தை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல் வரும் தினமான இன்று... என்ன நடக்கும் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜே சித்ராவைத் தொடர்ந்து... நடிகை ராஜேஸ்வரியின் விபரீத முடிவு: திரையுலகைத் தாக்கும் மரண அலை!
கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!