இயக்குனர் அமீர் முதல் கயல் ஆனந்தி படம் வரை.. சினிமா தயாரிப்பாளர் டூ திமுக பிரமுகர்.. யார் இந்த ஜாபர் சாதிக்?

Published : Feb 25, 2024, 08:17 PM IST
இயக்குனர் அமீர் முதல் கயல் ஆனந்தி படம் வரை.. சினிமா தயாரிப்பாளர் டூ திமுக பிரமுகர்.. யார் இந்த ஜாபர் சாதிக்?

சுருக்கம்

போதைப் பொருள் கடத்தல் புகாரில் சிக்கியிருக்கும் திமுக பிரமுகர் ஜாபர் சாதிக், திமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

“சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்து நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவரோடு கட்சியினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பதிவிட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “திமுகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவரே, இத்தனை ஆண்டுகளாக சென்னையில் இருந்து கொண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்திருப்பது, பலத்த சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. எனவே, உடனடியாக தமிழக அரசு போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

டெல்லி போலீசாருடன் இணைந்து போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில், டெல்லியில் நேற்று 50 கிலோ சுடோபெட்ரின் ரசாயனம் கடத்திய 3 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சுடோபெட்ரின் ரசாயனம், போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது.

திமுகவில் இருந்து நீக்கப்பட்டிற்கும் ஜாபர் சாதிக் யார் என்பதை பற்றி பார்க்கும் போது, அவர் தமிழ் சினிமாவில் பிரபல திரைப்பட தயாரிப்பாளராக இருக்கிறார். இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலுடன் ஜாபர் சாதிக்கிற்கு தொடர்பு இருப்பதாகவும், அதனால்தான் திமுகவில் அவர் வகித்த பதிவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

ஜாபர் சாதிக் தமிழில் கயல் ஆனந்தி நடிப்பில் ‘மங்கை’, இயக்குநர் அமீர் நடிப்பில் ‘இறைவன் மிகப் பெரியவன்’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர் ஆவார். திமுகவில் உள்ள முக்கிய பிரமுகர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் 10000 ரூபாய் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....
48 ஆண்டுகால சினிமா பயண நினைவுகளில் ஸ்ரீனிவாசன்; அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!