அழுது கொண்டே வெளியேறிய தர்ஷன் எங்கே? காவல் நிலையத்தில் நின்று போராடி வருகிறாரா சனம் ஷெட்டி!

Published : Feb 12, 2020, 06:42 PM IST
அழுது கொண்டே வெளியேறிய தர்ஷன் எங்கே? காவல் நிலையத்தில் நின்று போராடி வருகிறாரா சனம் ஷெட்டி!

சுருக்கம்

நடிகையும் மாடலுமான, சனம் ஷெட்டிக்கும் அவருடைய காதலர் தர்ஷனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் கூட நடந்து முடிந்து விட்ட நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.  

நடிகையும் மாடலுமான, சனம் ஷெட்டிக்கும் அவருடைய காதலர் தர்ஷனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் கூட நடந்து முடிந்து விட்ட நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

சனம் ஷெட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில், தர்ஷன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.  ஏற்கனவே பெயில் வேண்டும் என தர்ஷன் நீதி மன்றத்தை அணுகிய போது இவருடைய வழக்கை நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும் கடைசியாக காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக வந்த தர்ஷன், விசாரணை முடிந்த பின் அழுதபடியே வெளியேறியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சனம் ஷெட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்க படவில்லை என நடிகையின் தரப்பில் இருந்து கூறுகிறார்கள்.

தர்ஷன் எங்கு சென்றார் என்பதும் தெரியவில்லையாம், எனவே அவரை தேடி பிடித்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காவல் நிலையத்தில் நின்று நியாயத்திற்காக போராடி வருகிறாராம் சனம் ஷெட்டி.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சந்தானம் என் சகோதரன் : மறைந்த டாக்டர் சேதுராமனின் மனைவி உருக்கம்: கண்கலங்க வைக்கும் பின்னணி!
நண்பன் வெங்கடேஷுக்காகக் கொள்கையை மாற்றிய பாலகிருஷ்ணா: விஸ்வரூபமெடுக்கும் 'வாவ்' கூட்டணி!