
சின்னத்திரை சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்த சித்ரா, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பூந்தமல்லி அருகே உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார். அவரின் இந்த விபரீத முடிவு ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்தையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த மர்ம மரணத்திற்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என சித்ராவின் பெற்றோரும், உறவினர்களும் குற்றம்சாட்டினர். இதையடுத்து ஹேம்நாத்தை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைந்து விசாரணை நடத்தினர். சில மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த ஹேம்நாத் அண்மையில் ஜாமினில் வெளியே வந்தார்.
இதையும் படியுங்கள்... VJ chitra : சித்ரா ஒன்னும் நல்லவ கிடையாது... டப்பா நிறைய காண்டம் இருந்துச்சு - பகீர் கிளப்பிய சித்ராவின் தோழி
சித்ரா மரணமடைந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், அவரது கணவர் குறித்து சித்ராவின் தோழி ரேகா நாயர் மற்றும் ஹேம்நாத்தின் நண்பர் சையத் ஆகியோர் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஹேம்நாத்திற்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி பகீர் கிளப்பினர்.
இந்நிலையில் சித்ரா தற்கொலை வழக்கில் ஹேம்நாத்துக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து வேண்டும் என ஹேம்நாத்தின் நண்பர் சையத் ரோஹித் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். சித்ராவிற்கு ஹேம்நாத் அளித்த தொல்லைகள் குறித்து சாட்சியம் அளித்ததால், தனக்கு ஹேம்நாத் கொலை மிரட்டல் விடுப்பதாக சையத் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... சரக்கு, கஞ்சா, பொம்பளைங்க! இதுதான் அவன் வேலையே... சித்துவ அவன் தான் கொன்றுப்பான் - ஹேம்நாத்தின் நண்பர் புகார்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.