சீனாவிற்கு எதிராக குரல் - விவேக் எடுக்கும் புது முயற்சி......!!!

 
Published : Oct 08, 2016, 08:08 AM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
சீனாவிற்கு எதிராக குரல்  - விவேக் எடுக்கும் புது முயற்சி......!!!

சுருக்கம்

தமிழ் சினிமாவில் காமெடியிலும், குணச்சித்திர வேடங்களிலும்  தனக்கென தனி  முத்திரை பதித்தவர் விவேக்.

சிரிப்புடன் சிந்தனையை தூண்டும் வகையில் பொது மக்களுக்கு கருத்துக்களை கொண்டு போய் சேர்க்க  முயற்சிப்பதே இவரது நகைச்சுவையின் முக்கியம்சமாகும்.

இவர் மரம் நடுதல் போன்ற சமூக கருத்துக்களை நிஜ வாழ்க்கையிலும் வெளிப்படுத்துவார். இந்நிலையில்

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானுக்கு முழு ஆதரவு தருவதோடு இந்தியாவிற்கு வரும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டி சீனா தொல்லை கொடுத்து வருகிறது. இதனாலும் பல விவசாயிகள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து பிரபல காமெடி நடிகர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

'விழித்துக்கொள்வோம் நாம்! இனி சீனா பொருட்கள் வேண்டாம்! இந்திய உற்பத்திகளையே உபயோகிப்போம்! சீனா பாகிஸ்தானுக்கு உதவி புரிவது போல் பிரம்மபுத்திரா நதியை தடை செய்துள்ளது,என்று குறிப்பிட்டுள்ளார்.

சீனாவில் தயாராகும் பல பொருட்களின் முக்கிய சந்தையாக இந்தியா இருக்கும் நிலையில் விவேக் கூறியது போல இந்தியர்கள் அனைவரும் சீன பொருட்களை தவிர்த்தால், சீனாவில் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்படும் என்பது உண்மை.

இதற்கு இந்தியர்கள் ஒத்துழைப்பு தருவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!