
கன்னட திரையுலகினரின் எதிர்ப்பு காரணமாக கன்னடத்தில் பல ஆண்டுகளாக பிற மொழிப் படங்கள் மொழிமாற்றம் செய்யப்படாமல் நேரடியாகவே வெளியாகி வந்தது. 1960-களின் தொடக்கம் முதல் நடைமுறையில் இருந்து வரும் இந்த வழக்கத்தை கடந்த 2017-ம் ஆண்டு அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் முறியடித்தது. கன்னடத்தில் ‘சத்யதேவ் ஐபிஎஸ்’ எனும் பெயரில் இப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.
குறைந்த அளவிலான திரையரங்குகளில் வெளியானாலும் இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ஆரம்பம், விவேகம் என அஜித்தின் படங்கள் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகின.
இதில் கடந்த ஆண்டு வெளியான விவேகம், கன்னட படங்களுக்கு இணையாக அங்கு பல திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தியது. அஜித்துக்கென கர்நாடகாவில் ஒரு மிகப்பெரிய மார்கெட்டையும் இப்படம் உருவாக்கித் தந்தது.
இந்நிலையில் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான விஸ்வாசம் படத்தை கன்னடத்தில் ‘ஜகமல்லா’ எனும் பெயரில் டப் செய்து வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம் கடந்த 50 ஆண்டுகளில் கன்னட மொழியில் அடுத்தடுத்து படங்களை டப் செய்து வெளியிட்டு வெற்றி கண்ட ஒரே பிறமொழி நடிகர் எனும் சிறப்பை அஜித் பெற்றுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.