கூகுளில் வளைத்து வளைத்து தேடும் இந்த தூக்கு துரை யார்? விஸ்வாசத்தில் அஜித்திற்கு பெயர் வைக்க காரணம்?

Published : Nov 26, 2018, 04:43 PM ISTUpdated : Nov 26, 2018, 04:58 PM IST
கூகுளில் வளைத்து வளைத்து தேடும் இந்த தூக்கு துரை யார்? விஸ்வாசத்தில் அஜித்திற்கு பெயர் வைக்க காரணம்?

சுருக்கம்

விஸ்வாசம் படத்தில் அவரின் ஒரு  அஜித் பெயர் வெளியாகியுள்ளது. தூக்கு துரை என்ற அந்த பெயரை அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. அதே நேரத்தில் படத்தில் அஜித்திற்கு இந்த பெயர் வைக்கப்படத்திற்கான காரணமும் கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் அஜித். இவர் நடிப்பில் விஸ்வாசம் படம் வரும் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இருக்கின்றனர். விஸ்வாசம் படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் பெயர் தூக்கு துரை, இதை நேற்று வெளிவந்த மோஷன் போஸ்டரிலும் தெரிவித்து இருந்தனர். தற்போது தூக்கு துரை என்றால் என்ன, யார் அது என்று விசாரிக்கையில் மதுரை பக்கம் உள்ள காவல் தெய்வம் தான் தூக்கு துரையாம், இதை ரசிகர்கள் கண்டுப்பிடித்து பகிர்ந்து வருகின்றனர், 

இயக்குனர் சிவா இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’அடுத்த பொங்கல் பண்டிகை அன்று சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘பேட்ட’ படத்துடன் வெளியாக உள்ளது. இந்நிலையில் விஸ்வசம் படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி இருந்தது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மூலம் அஜித்தின் கதாபாத்திரத்தின் பெயர் ‘தூக்குதுரை’ என்பது உறுதியாகியுள்ளது. ஆனால், உண்மையில் தூக்குத்தூரை என்பது யார்? அவரது வரலாறு என்ன என்பது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் வாழ்ந்த சிங்கம்பட்டி ஜமீன்தார்கள் தங்கள் அரண்மனையின் பின்புறம் ஒரு கோவிலை கட்டி வணங்கி வந்தனர். அந்த கோவிலில் முறுக்கு மீசை, தலையில் முண்டாசு என கம்பீரமாக உள்ளது தூக்குதுறையின் சிலை. இந்த மகாதேவர் கோவிலில் உள்ள ஒரு தூணில் தூக்குதுரை என்ற பெரியசாமி தேவர் சிலை வடக்கு நோக்கி உள்ளது. முறுக்கிய மீசை, மிடுக்கான தோற்றம், தீர்க்கமான கண்கள், தலைப்பாகையுடன் காட்சியளிக்கும் இவர், சிங்கம்பட்டி ஜமீனின் 24வது பட்டம் ஆவார். 

இவர் சிறை பிடிக்கப்பட்ட தனது நண்பனை காப்பாற்ற சிறை காவலரை கோலி செய்த குற்றத்திற்காக தூக்கு தண்டனையை ஏற்றவர் தான் இந்த தூக்கு துறை. இவரது தியாகத்தை பாராட்டி இவரை கடவுளாக வணங்கி வருகின்றனர்.

இதுவரை தூக்குதுரை என்றால் யார் என்றே பலருக்கு தெரியாமல் இருந்த நிலையில் தற்போது இந்த பெயர் கூகுளில் வைரலாகி வருகிறது. 'விஸ்வாசம்' படத்தின் கதையும் இந்த நிஜ தூக்குதுரை கதையா? என தற்போது பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

25 ஆண்டுகளில் முதன்முறையாக படையப்பா படம் பார்த்த ரம்யா கிருஷ்ணன்... இத்தனை வருஷமா ஏன் பார்க்கல தெரியுமா?
கடைசியில் மீனாவிடம் 'சென்டிமென்ட்' டிராமாவை அரங்கேற்றிய தங்கமயில்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 விறுவிறுப்பு!