யாரென்று தெரிகிறதா? - தேசியகொடியை நெஞ்சில் வைத்த தமிழனாக 'உலகநாயகன்'

 
Published : May 03, 2017, 10:30 AM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
யாரென்று தெரிகிறதா? - தேசியகொடியை நெஞ்சில் வைத்த தமிழனாக 'உலகநாயகன்'

சுருக்கம்

viswaroopam 2 first look released

கடந்த 2013 ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில்  வெளியான விஸ்வரூபம் படத்தின் அடுத்த பாகமான விஸ்வரூபம் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை 7 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 

பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியானது விஸ்வரூபம், அப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான காட்சிகள் 40 சதவீதத்தை எடுத்திருந்தார்.

விஸ்வரூபம் 2 படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு கணிசமான தொகைக்கு கைமாற்றிவிட்டார் கமல்ஹாசன் இந்நிலையில் விக்ரம் நடிப்பில் வெளியான ஐ படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் பெரும் பொருளாதார பிரச்சனையில் சிக்கியிருந்தார்.

இதனால் மீதமுள்ள காட்சிகளை எடுக்க பணமில்லாததால் தள்ளி போயிருந்த விஸ்வரூபம் இரண்டாம் பாகம் தற்போது கமலே  ஆஸ்கர் ரவிச்சந்திரனிடமிருந்து கைப்பற்றியுள்ளதாக தெரிந்தது. 

இந்நிலையில், 'விஸ்வரூபம் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகிறது என்று கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

அதன்படி ' 'விஸ்வரூபம் 2' படத்தின் தமிழ் போஸ்டர்கள் நேற்று மாலை 7 மணிக்கு ட்விட்டரில் வெளியானது. இந்த போஸ்டரில் தேசிய கொடியை கமல் தனது உடம்பில் போர்த்தியபடி அசத்தலாக வெளியானது.

இந்தியானாக முதல் தோற்றத்தில்!! தமிழனாக படத்தின் பெயரில்!!! முதல் பார்வையில் தமிழனும் இந்தியனுமாக 'விஸ்வரூபம் 2 ' பாஸ்ட் லுக் போஸ்டரில் நெகிழவைத்துள்ளார்.

விஸ்வரூபம் 2 வில்  மற்ற பணிகளையும் இன்னும் இரு மாதங்களுக்குள் முடித்துவிட்டு, அக்டோபரில் வெளியிடும் திட்டத்தில் உள்ளாராம் உலகநாயகன்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அகண்டா 2 வசூல் வேட்டை: 10 நாட்களில் இத்தனை கோடியா? பாக்ஸ் ஆபிஸை அதிரவைக்கும் பாலகிருஷ்ணா!
தமிழ் பிக்பாஸ் 9ல் சிறந்த டாப் 5 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? டாப்பில் பாருவா?