அரசியல் அறிவிப்பு வருதோ இல்லையோ... விஸ்வரூபம் 2 அறிவிப்பு வந்துடுச்சி!

Asianet News Tamil  
Published : Nov 04, 2017, 07:23 PM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
அரசியல் அறிவிப்பு வருதோ இல்லையோ... விஸ்வரூபம் 2 அறிவிப்பு வந்துடுச்சி!

சுருக்கம்

vishwaroopam triler release

நடிகர் கமலஹாசன் பிறந்தால் நவம்பர் 7 ஆம் தேதி முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். பலரும் அது கண்டிப்பாக அவரின் அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்பாகத் தான் இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

கமலஹாசனும் கடந்த சில தினங்களாக அரசியலுக்கு அச்சாணி போடுவது போன்ற பல விஷயங்களை செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்தது தான். இந்நிலையில் அவருடைய பிறந்த நாள் அன்று, கமலஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலர் வெளியாக வாய்ப்பு உள்ளதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரன் கூறியுள்ளார்.

இது குறித்து சமீபத்தில் அவர் பேட்டியில் கூறுகையில், விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலர் தயாராகிவிட்டதாகவும், அருமையாக வந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் நவம்பர் மாதம் வெளியிட நிறைய வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்படிப் பார்த்தால் நவம்பர் மாதம் உலக நாயகன் பிறந்த நாளும் வருவதால் அன்றே இந்தப் படத்தில் ட்ரைலர் வெளியாக நிறைய வாய்ப்புகள் உள்ளது. 2015ஆம் ஆண்டிற்கு பின் கமல் நடித்த படத்தின் ட்ரைலர் வெளியாவதால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Sadha : ஜெயம் பட நடிகையா இது? 41 வயதிலும் ஆளை மயக்கும் அதே அழகில் நடிகை சதா லேட்ட்ஸ்ட் கிளிக்ஸ்!
விஜய் படம் குறித்து வந்த அதிர்ச்சி அப்டேட்! தளபதி ரசிகர்கள் மீண்டும் அப்செட்.!