
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷ்ணு. இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'ராட்சசன்' திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்றதோடு வசூலிலும் சாதனை படைத்தது.
இந்நிலையில் திடீர் என நடிகர் விஷ்ணு, கல்லூரி காலத்தில் இருந்து காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி ரஜினியை விவாகரத்து செய்து விட்டதாக அறிவித்தார்.
இந்த செய்தி வெளியாகி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், 'ராட்சசன் திரைப்படத்தில் நடித்த போது, நடிகை அமலா பாலுக்கும், விஷ்ணுவுக்கும் நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டு பின் அது காதலாக மாறியதாகவும். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த தகவல் நம்பக தன்மையற்று இருந்தாலும், சமீபத்தில் இதற்காக தான் மனைவியை விஷ்ணு விஷால் விவாகரத்து செய்தாரா? என்பது போன்ற கேள்விகளை கூட ரசிகர்கள் பலர் எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் இந்த செய்தியை நடிகர் விஷ்ணுவிஷால் முற்றிலும் மறுத்தார். மேலும் இதுபோன்ற பைத்தியக்காரத்தனமான செய்தியை வெளியிட வேண்டாம் என்றும், ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார் விஷ்ணுவிஷால்.
தற்போது இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் கூறுகையில், இதில் துளியும் உண்மை இல்லை, என் விவாகரத்து செய்தி தொடர்ந்து இப்படி ஒரு கிசுகிசு வந்தது கஷ்டமாக இருக்கிறது. ஆனால் முதன்முதலாக நம்மை பற்றி கிசுகிசு வந்ததே என்று நினைத்தேன். எல்லோருக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது அதை நினைத்துக் கொண்டு எழுதினால் நன்றாக இருக்கும் என்று மனவேதனையோடு கூறியுள்ளார் விஷ்ணு.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.