நடிகர் விஷ்ணு விஷாலுடன் காதலா ? பிரபல பேட்மிண்டன் வீராங்கனை என்ன சொல்கிறார் ?

Published : Jun 05, 2019, 10:08 PM ISTUpdated : Jun 05, 2019, 10:09 PM IST
நடிகர் விஷ்ணு விஷாலுடன்  காதலா ? பிரபல பேட்மிண்டன் வீராங்கனை என்ன சொல்கிறார் ?

சுருக்கம்

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட ‘செல்பி’ படங்களை விஷ்ணுவிஷால் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். இது குறித்து ஜுவாலா கட்டா விளக்கம் அளித்துள்ளார்.

வெண்ணிலா கபடி குழு’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விஷ்ணு விஷால் பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், முண்டாசுப்பட்டி, ஜீவா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மாவீரன் கிட்டு , ராட்சஷன் உள்ளிட்ட  பல படங்களில் நடித்தார்.

கடந்த ஆண்டு  இவர் நடித்து வெளியான ராட்சசன் வெற்றிகரமாக ஓடி நல்ல வசூலலைத் தந்தது.  தற்போது ஜகஜால கில்லாடி படத்தில் நடித்து வருகிறார். எழில் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. விஷ்ணு விஷாலுக்கு 2011-ல் திருமணம் முடிந்து கடந்த வருடம் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.

அதன்பிறகு ராட்சசன் படத்தில் ஜோடியாக நடித்த அமலாபாலுடன் அவரை இணைத்து பேசினர். இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இதனை விஷ்ணு விஷால் மறுத்தார். என் விவாகரத்தை தொடர்ந்து இப்படி ஒரு கிசுகிசு வந்தது வருத்தம் அளிக்கிறது என விஷ்ணு தெரிவித்தார்.

இந்த நிலையில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட ‘செல்பி’ படங்களை விஷ்ணுவிஷால் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்களின் கீழே வேறு எந்த தகவலையும் அவர் பதிவிடவில்லை. 

ஆனால் கிரிக்கெட் வீரர் அஷ்வின் கூட, இது என்ன திரைப்படமா? என்றுகேட்ட கேள்விக்கு, 'நான் நடிகை இல்லை அஷ்வின்' என ஜூவாலா கட்டா பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..


PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!