பழிக்கு பழி வாங்கிய விஷால்....! எலி ஏன் அம்மணமா ஒடுசின்னு இப்ப தெரியுதா..?

 
Published : Apr 27, 2018, 06:57 PM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
பழிக்கு பழி வாங்கிய விஷால்....! எலி ஏன் அம்மணமா ஒடுசின்னு இப்ப தெரியுதா..?

சுருக்கம்

vishal shows his against sve sekar through journalist

பழிக்கு பழி வாங்கிய விஷால்....! எலி ஏன் அம்மணமா ஒடுசின்னு இப்பதான் தெரியுது...!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் பெண் பத்திரிக்கையாளர் கன்னத்தில் கை வைத்த நேரம், பெரும் பிரச்சனைக்கு வழி வகுத்து விட்டது...

பெண் நிருபர் கார சாரமாக யோசனை செய்து பதிவிட.....அது குறித்து பாஜக ஆதரவாளர் எஸ்வி சேகர், ஆளுநருக்கு ஆதரவாக  பதிவிடுன்கின்ற நோக்கில் தரக்குறைவாக பதிரிக்கையாளர்களை பற்றி  பதிவிட பத்திரிக்கையாளர்களுக்கு பெரும் கொந்தளிப்பை  ஏற்படுத்தியது...

அதன் விளைவு எஸ்வி சேகர் வீட்டின் மீது கல்லை கூட எரியும் அளவிற்கு கொண்டு சென்றுவிட்டது...இருந்தாலும் இதற்கிடையில் எஸ்வி சேகர் வீடியோ மூலம் பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரி இருந்தார்...

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இன்னமும் பிரச்சனை தீயா பரவி கிட்டு  தான் இருக்கு...

சரி இப்ப நாம விஷயத்துக்கு வந்து விடலாம் ....

அதாவது, கடந்த ஜனவரி மாதம் நடிகர் மற்றும் நடிகைகளை அழைத்துக்கொண்டு மலேசியாவுக்கு சென்று கலை நிகழ்சிகள்  நடத்தினார்கள் அல்லவா ..?

அது குறித்து எஸ்வி சேகர் கிழி கிழினு கிழித்து பதிவிட்டு இருந்தார்  மேலும் சில சேனல்களுக்கும் பேட்டி கொடுத்திருந்தார்

அதில்,"அஜித் ஏன் மலேசியாவிற்கு செல்லவில்லை தெரியுமா ..?

நடிகர் சங்க உறுப்பினர்கள் பலரை விமான நிலையம் வரை அழைத்து சென்று பின்னர் வீட்டிற்கு அனுப்பி விட்டனர்

மலேசிய பத்திரிக்கையில் கூட, பிச்சை எடுக்க இங்க வந்திருக்காங்க என  அங்கு செய்தி போட்ட விவரம் தெரியுமா ..?

நடிகர் மனோஜ் கிட்ட கேளுங்க..இன்னும் பல கேவலத்தை நல்லா விவரிப்பார்...என சும்மா தாறு மாறாக விஷாலின் நிர்வாகத்தை புகழ்ந்து  தள்ளிவிட்டார்...அதாவது....புகழ்ந்து என்றால் புகழ்ந்து தான்...

இதனை பார்த்து செம கடுப்பான விஷால் ஆத்திரத்தில்,வாட்ஸ் அப்  குழுவிலிருந்து எஸ்வி சேகரை நீக்கி விட்டார்

அதோடு இதுநாள் வரை, பதம் பார்த்து காத்திருந்த விஷாலுக்கு கிடைத்தது சரியான வாய்ப்பு..அதாங்க, பத்திரிக்கையாளர் விமர்சனம்  கையில் எடுத்தார் அல்லவா விஷால், எஸ்வி சேகர் வீட்டின் முன் போராடிய பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப  பெற வேண்டும்.... பத்திரிக்கையாளர்களின் நண்பனாக நானும் வருந்துகிறேன் என்ற அளவிற்கு உருகி விட்டு, ஆதரவு தெரிவித்து  இருந்தார்...

விஷாலின் ஆதரவு இல்லாமல் இருந்தால் கூட பாரவாயில்லை...இவர் ஆதரவு தெரிவித்த ஒரே காரணத்தினால் கூட எஸ்வி சேகருக்கு  இன்னும் பிபி எகிரி இருக்கும் என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்

இப்ப தெரிகிறதா..? எலி ஏன் அம்மணமா ஒடுசின்னு..?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!