’அயோக்யா’வுக்காக 48 மணிநேரம் நான்ஸ்டாப்பாக நடித்து சாதனை புரிந்த விஷால்...

Published : Feb 17, 2019, 11:43 AM IST
’அயோக்யா’வுக்காக 48 மணிநேரம் நான்ஸ்டாப்பாக நடித்து சாதனை புரிந்த விஷால்...

சுருக்கம்

இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கும் தனது ‘அயோக்யா’ படத்துக்காக கொஞ்சமும் ஓய்வெடுக்காமல் தொடர்ந்து 48 மணி நேரம் நடித்து சாதனை  படைத்துள்ளார் நடிகர் விஷால். ‘த டெம்பர்’ என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக்கான இப்படம் ஏப்ரல் 14ல் திரைக்கு வருகிறது.

இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கும் தனது ‘அயோக்யா’ படத்துக்காக கொஞ்சமும் ஓய்வெடுக்காமல் தொடர்ந்து 48 மணி நேரம் நடித்து சாதனை  படைத்துள்ளார் நடிகர் விஷால். ‘த டெம்பர்’ என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக்கான இப்படம் ஏப்ரல் 14ல் திரைக்கு வருகிறது.

லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில் விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’. ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் மிகப் பிரமாண்ட நீதிமன்றம் செட் ஒன்று போடப்பட்டுள்ளது.  படத்தின் திருப்புமுனையாக அமைய உள்ள மிக முக்கியமான கோர்ட் காட்சியை கடந்த மூன்று நாட்களாக இந்த செட்டில் தொடர் படப்பிடிப்பு நடைபெற்றது.

நடிகர் ஆர்.பார்த்திபன், ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, நடிகை ராசி கண்ணா, சோனியா அகர்வால், சச்சு உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களோடு, சுமார் 200க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் இணைந்து  நடிக்கும் பிரம்மாண்ட காட்சி படமாக்கப்பட்டது.

படத்தின் முக்கிய காட்சி என்பதால் இக்காட்சி முழுவதும் நடிகர் விஷால் தொடர்ந்து நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இவருடன் இணைந்து நடிக்கும் கதாபாத்திரங்கள் அவரவர் பகுதியை நடித்துவிட்டு சென்றபோதும், விஷால் மட்டும் சுமார் 48 மணி நேரம் இரவு பகல் பாராமல் நீதிமன்ற காட்சிகள் சிறப்பாக அமைய தொடர் நடிப்பில் ஈடுபட்டார். படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற இருக்கிறது. இப்படம் வரும் ஏப்ரல் 14ம்தேதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் விஷால். அவர்கள் இருவரும் இணையும் முதல் படம் இது. நடிகர் சங்கக் கட்டட திறப்பு விழா முடிந்து, தனது திருமணத்தையும் முடித்தபிறகு ஜூன் அல்லது ஜூலையில் கவுதம் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஷால்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிலம்ப‘அரசன்’ ஆட்டம் ஆரம்பம்... அதகளமாக தொடங்கிய அரசன் ஷூட்டிங் - எங்கு தெரியுமா?
கிரிஷ் விவகாரத்தில் யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த முத்து.. ஆடிப்போன மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்