கேரளாவிற்கு நிதி உதவி செய்த விஷால்...!

Published : Aug 16, 2018, 04:22 PM ISTUpdated : Sep 09, 2018, 08:17 PM IST
கேரளாவிற்கு நிதி உதவி செய்த விஷால்...!

சுருக்கம்

கடந்த சில நாட்களாக கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரள மாநிலம் வெள்ள பெருக்காலும் மலை, மண் சரிவினாலும் பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை மிகவும் துயரத்துக்குள்ளாகியுள்ளது. 

கடந்த சில நாட்களாக கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரள மாநிலம் வெள்ள பெருக்காலும் மலை, மண் சரிவினாலும் பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை மிகவும் துயரத்துக்குள்ளாகியுள்ளது. 

வரலாறு காணாத இயற்கை சீற்றத்தை சந்தித்து வரும் அம்மாநில மக்களுக்கு தமிழ் திரை உலகம் நேசக்கரம் கொடுத்து உதவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க, நடிகர்கள் கமல் ,சூர்யா, கார்த்தி, நடிகை ரோஹிணி ஆகியோர் ஏற்கனவே நிதி உதவிகள் அளித்துள்ளனர். இந்நிலையில்  மதுரையில் படப்பிடிப்பில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும்,நடிகர் சங்க பொதுசெயலாளருமான நடிகர் விஷால் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குகிறார். 

மேலும் அவர் திரைத்துறையினரிடமும், ரசிகர்களிடமும், மக்களிடமும் இயற்கையின் சோதனைகளை சந்தித்து துயரபட்டுக்கொண்டிருக்கும் நமது சகோதரர்களான கேரளா மாநில மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை அளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அய்யய்யோ மீனா கண்டுபிடிச்சிட்டாளே... சீட்டிங் பண்ணி சிக்கிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
அஞ்சானை அரெஸ்ட் பண்ண உத்தரவா? கைது நடவடிக்கை பற்றி உண்மையை போட்டுடைத்த லிங்குசாமி