தமன்னாவுடன் வெளிநாட்டுக்குப் பறக்கும் விஷால்... நிம்மதிப் பெருமூச்சு விட்ட கமல் வேட்பாளர்கள்...

Published : Mar 27, 2019, 03:31 PM IST
தமன்னாவுடன் வெளிநாட்டுக்குப் பறக்கும் விஷால்... நிம்மதிப் பெருமூச்சு விட்ட கமல் வேட்பாளர்கள்...

சுருக்கம்

இன்னும் ஓரிரு தினங்களில் சுந்தர்.சி. இயக்கத்தில் துருக்கி நாட்டில் நடைபெறவிருக்கும் படப்பிடிப்பில் விஷால் கலந்துகொள்கிறார். இதன் மூலம்  விஷால் மூலமாக கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இருந்த பேராபத்து ஒன்று நீங்கியது.

இன்னும் ஓரிரு தினங்களில் சுந்தர்.சி. இயக்கத்தில் துருக்கி நாட்டில் நடைபெறவிருக்கும் படப்பிடிப்பில் விஷால் கலந்துகொள்கிறார். இதன் மூலம்  விஷால் மூலமாக கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இருந்த பேராபத்து ஒன்று நீங்கியது.

விஷால் - தமன்னா இணைந்து ஏற்கனவே ’கத்திச் சண்டை’ படத்தில் நடித்திருந்தனர். நகைச்சுவை கதாபாத்திரங்களில் வடிவேலு, சூரி ஆகியோர் நடித்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் வரவேற்பு பெறவில்லை. அதைத் தொடர்ந்து இருவரும் சுந்தர்.சி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் மீண்டும்  இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்றுவந்த நிலையில், தற்போது படக்குழு துருக்கிக்கு சென்று படப்பிடிப்பை நடத்த உள்ளது. இதில் கலந்துகொள்ள விஷாலும் தமன்னாவும் துருக்கி கிளம்புகின்றனர்.

தயாரிப்பாளர் சங்கப் பிரச்சினைகளில் நடிகர் விஷாலுக்கு ஆதரவாகவே கமல் பெரும்பாலும் பேசி வந்த நிலையில், விஷால் வரும் பாராளுமன்ற,சட்டசபை இடைத்தேர்தல்களில் கமல் வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யப்போவதாக பலமான வதந்திகள் நடமாடி வந்தன. இதனால் மநீம வேட்பாளர்கள் பெரும் பீதியில் இருந்தனர்.

தற்போது அவர் படப்பிடிப்புக்காக தமன்னாவுடன் துருக்கி செல்வதால் பிரச்சாரத்து வரமாட்டார் என்பது உறுதியாகியிருக்கிறது. இச்செய்தியால் கமல் வேட்பாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Thalaivar Thambi Thalaimaiyil: பாக்ஸ் ஆபீஸ்ல இனி தம்பியோட ஆட்டம் தான்! மிரள வைக்கும் 10 நாள் வசூல் நிலவரம்!
Pandian Stores 2 Promo: சக்திவேலின் திட்டம் பலித்தது! பாண்டியன் குடும்பத்தில் வெடித்த புது பஞ்சாயத்து! பாண்டியன் ஸ்டோர்ஸில் இனி வரும் வாரங்கள் ரணகளம்!