"தமிழ் ராக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - கமிஷனரிடம் விஷால் புகார்

 
Published : May 07, 2017, 04:52 PM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
"தமிழ் ராக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - கமிஷனரிடம் விஷால் புகார்

சுருக்கம்

vishal complaint for tamil rockers

தயாரிப்பாளர் சங்க தலைவரும்,  நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் தற்போது தயரிப்பாளர்கள் எந்த விதத்திலும் நஷ்டப்பட கூடாது என்பதில் மிக தெளிவாக இருக்கிறார்.

தயாரிப்பாளர்கள், வாழ்வாதாரம் உயரும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகளிலும்  ஈடுபட்டு  வருகிறார். அதில் முக்கியமானது திருட்டு விசிடி ஒழிப்பு மற்றும் இணையாளங்களில் படங்கள் வெளியிடப்படுவதை தடுப்பது தான்.

இதன் முதல் கட்டமாக, இன்று சென்னை காவல் ஆணையரை சந்தித்து, புதுப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வரும், தமிழ் ராக்கர்ஸ் வலைத்தளத்தை முடக்க வேண்டும் என மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறி இருப்பது, தற்போது வெளியாகி பிரமாண்ட சாதனையை செய்திருக்கும் பாகுபலி 

2  திரைப்படம் மற்றும் இனி வரவிருக்கும் படங்கள் இது போன்ற சில ஊடகங்களில் வெளியிடப்படுவதால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதாகவும். 

இதனால் திரைப்பட துறையை  சார்த்த பல குடும்பங்கள், பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட காவல் ஆணையர் விரைவில் விசாரணை செய்து வலைதளத்தை முடக்கும் முயற்சிகள் எடுக்கப்படும் என கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அடேங்கப்பா... 2025ல் மட்டும் இத்தனை தமிழ் சீரியல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதா? முழு லிஸ்ட் இதோ
தங்கமயில் முதல் கோமதி வரை – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடு ஹைலைட்ஸ்!