
திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் குறித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்த விஷால் பேருக்கு மன்னிப்பு கேட்கிறார் , ஆனால் புத்தாண்டு அன்றுகூட அவதூறாக விமர்சிக்கிறார் ஆகவே அவர் மன்னிப்பை ஏற்க தயாரிப்பாளர் சங்கம் மறுப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு எதிராக அவதூறு கருத்திற்கு வருத்தம் தெரிவித்தால், சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து விஷால் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து நீதிமன்றத்தில் கடிதம் அளித்தார். அதனை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் விவாதித்து பதிலளிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு நீதிபதி ராஜேந்திரன் முன்னிலை விசாரணைக்கு வந்தது. அப்போது திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நடிகர் விஷால் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம் மீதும், அதன் நிர்வாகிகள் மீதும் அவதூறு கருத்தை பேசி வருகிறார்.
கடந்த புத்தாண்டு நிகழ்ச்சியில் கூட டி.வி. விவாதங்களில் அவதூறு கருத்தை பேசி உள்ளார். எனவே அவர் வருத்தம் தெரிவித்த பதிலளித்த கடித்தை தயாரிப்பாளர் சங்கம் ஏற்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணையை, வரும் செவ்வாய் கிழமை ஒத்தி வைத்து நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.