லாஸ்லியாவுக்கு விஜய் டிவி கொடுக்கப்போகும் வாழ்நாளில் மறக்க முடியாத சர்ப்ரைஸ்!!

Published : Sep 05, 2019, 05:14 PM IST
லாஸ்லியாவுக்கு விஜய் டிவி கொடுக்கப்போகும் வாழ்நாளில் மறக்க முடியாத சர்ப்ரைஸ்!!

சுருக்கம்

லாஸ்லியாவை ப்ரீஸ் டாஸ்க் வரைக்கும் வைக்க உள்ளதாம், ஏனென்றால் லாஸ்லியாவின் அப்பாவை கனடாவிலிருந்து வரவழைத்து சர்ப்ரைஸ் கொடுக்க பிளான் பண்ணிருக்காம்.  

லாஸ்லியாவை ஃப்ரீஸ் டாஸ்க் வரைக்கும் வைக்க உள்ளதாம், ஏனென்றால் லாஸ்லியாவின் அப்பாவை கனடாவிலிருந்து வரவழைத்து சர்ப்ரைஸ் கொடுக்க பிளான் பண்ணிருக்காம்.

பரபரப்புக்கு சிறிதும் பஞ்சமில்லாமல் போகும் அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஆதரவை அதிகம் பெற்றவர்கள் லிஸ்டில் இருக்கும் இலங்கையை சேர்ந்த லாஸ்லியாவின் பெயர் லொஸ்லியா மரியநேசன்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களில் அவருக்கென லாஸ்லியா ஆர்மி என்ற இணைய பக்கங்களும் அவரின் ரசிகர்களினால் தொடங்கப்பட்டன. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வட மாகாணத்தின் கிளிநொச்சியில், 1996ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி பிறந்த லொஸ்லியா,  கிளிநொச்சியில் அன்று காணப்பட்ட யுத்த சூழல் காரணமாக கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திற்கு லாஸ்லியாவின் பெற்றோர் குடியேறினர்.

திருகோணமலையிலுள்ள சின்ன கிராமமானஅன்புவெளிப்புரம் என்ற பகுதிக்கு சென்ற அவர்கள், ஓலைகளினாலான வீடு கட்டி, அந்த வீட்டில் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வந்துள்ளனர். பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட லாஸ்லியாவின் தந்தை மரியநேசன், டிரைவராக வேலை செய்து வந்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு காலப் பகுதியில் குடும்பம் எதிர்கொண்ட கஷ்ட சூழ்நிலைக்கு மத்தியில், லாஸ்லியாவின் தந்தை வேலைக்கு கனடா சென்றுள்ளார். இன்றுவரை  லொஸ்லியா மற்றும் அவரது இரண்டு சகோதரிகள், தனது தாயான மேரி மாக்ரட்டின் அரவணைப்பின் கீழ் திருகோணமலை சென் மேரிஸ் கல்லூரியில் கல்வி கற்றுள்ளனர். லாஸ்லியா, தமிழ் சார்ந்த பல்வேறு போட்டிகள், விவாதங்கள் ஆகியவற்றில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி தற்போது உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பார்க்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த சில நாட்களில் சீட்டுகுலுக்கு போட்டு அப்பாவை பற்றி லாஸ்லியா பேசும்போது‘அப்பாவை அவ்வ்வ்வ்வளவு பிடிக்கும்’ என்ற அவர், 10 வருடங்களாக மகள்களுக்காக கனடா சென்றவரைப் பிரிந்திருப்பதை வேதனையுடன் சொன்னார். இந்த நிகழ்ச்சியில் வநத அனைவரும் அவர் அவர்களை தங்களது அப்பாவை பற்றி சொன்னதைவிட லாஸ்லியா சொன்னது அனைவரின் நெஞ்சையும் உருக்கியதென்றே சொல்லலாம்.

லாஸ்லியாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக விஜய் டிவி நிர்வாகம், லாஸ்லியாவை ஃப்ரீஸ் டாஸ்க் வரைக்கும் வைக்க உள்ளதாம், ஏனென்றால் லாஸ்லியாவின் அப்பாவை கனடாவிலிருந்து வரவழைத்து சர்ப்ரைஸ் கொடுக்க பிளான் பண்ணிருக்காம், அநேகமாக அடுத்த இரண்டு வாரங்களில் இது நடக்கும் என சொல்கிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜயகாந்த் மகன் ஹீரோவாக பாஸ் ஆனாரா? ஃபெயில் ஆனாரா? கொம்புசீவி விமர்சனம் இதோ
2025-ல் 100 கோடிக்கு மேல் வசூலை வாரிசுருட்டியும் அட்டர் பிளாப் ஆன டாப் 5 படங்கள்