
சீரியல்கள் என்றாலே சன் தொலைக்காட்சி என்ற நிலைமையை மாற்றி பல்வேறு சீரியல்களை விஜய் டிவி ஒளிபரப்பி வருகிறது. விஜய் டிவியின் சீரியல்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். மதியம் தொடங்கி இரவு வரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த நிலையில் தற்போது மூன்று பிரம்மாண்ட சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல் தான் ‘பாக்கியலட்சுமி’. இந்த சீரியலில் கதாநாயகியாக இருக்கும் பாக்யாவிற்கு பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஒவ்வொன்றையும் அவர் சமாளித்து வெற்றி பெற்று வருகிறார். கதை ஒரே மாதிரி சென்று கொண்டிருப்பதால் ரசிகர்களுக்கு போர் அடித்து விட்டதாக கூறப்படுகிறது. தொடரில் நேரம் மாற்றம் ஏற்பட்ட பிறகும் டிஆர்பி குறைந்த வண்ணம் இருக்கிறது.
‘ஆஹா கல்யாணம்’
புதிய தொழிலை தொடங்குவதும், அதில் பிரச்சனை ஏற்படுவதும், அதிலிருந்து பாக்யா மீண்டு வருவதும் என அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டது. எனவே இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக ‘ஆஹா கல்யாணம்’ தொடர் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
‘சக்திவேல்’
அடுத்தபடியாக மதியம் ஒளிபரப்பாகி வரும் ‘சக்திவேல்’ தொடரும் முடிவை நெருங்கி உள்ளது. இந்த மூன்று சீரியல்களையும் அடுத்தடுத்து முடிக்க விஜய் டிவி திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த வாரத்துடன் ‘பொன்னி’ சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அடுத்த அடுத்த தொடர்களை முடிக்க விஜய் டிவி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.