4 வருடம் காதலித்து திடீர் என திருமணம் செய்து கொண்ட விஜய் டிவி சீரியல் பிரபலங்கள்..! குவியும் வாழ்த்து!

Published : Nov 12, 2019, 01:17 PM ISTUpdated : Nov 12, 2019, 01:20 PM IST
4 வருடம்  காதலித்து திடீர் என திருமணம் செய்து கொண்ட விஜய் டிவி சீரியல் பிரபலங்கள்..! குவியும் வாழ்த்து!

சுருக்கம்

விஜய் டிவி தொலைக்காட்சி பிரபலங்கள் பலருக்கு, இந்த வருடம் அடுத்தடுத்து திருமணம் நடைபெற்று வருகிறது. 'ராஜா ராணி' சீரியல் மூலம் காதலர்களாக மாறிய, ஆலியா - சஞ்சீவ் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், சரவணன் மீனாட்சி மைனாவிற்கும் ஒரு சில தினங்களுக்கு முன்பு, இரண்டாவது திருமணம் வெகு விமர்சியாக நடந்தது.  

இவர்களை தொடர்ந்து, பகல் நிலவு சீரியலில் நடித்து, பின் காதல் ஜோடியாக கடந்த நான்கு வருடங்களுக்கு மேல் வலம் வந்த, அன்வர்-சமீரா இருவரும் திடீர் என திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்த தகவலை, சமீரா புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். மேலும் இவர்களுடைய திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள், மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

கிட்ட தட்ட நான்கு வருடங்களுக்கு மேல் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன், திருமண பந்தத்தில் இணைத்துள்ள இவர்கள் இருவருக்கும், ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?