
பாண்டியன் ஸ்டார் உள்ளிட்ட பல சீரியல்கள், மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம், மிகவும் பிரபலமானவர் வி.ஜே.சித்ரா. இவருக்கு கடத்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி, ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதனால் இன்ப திடீர் என இன்ப அதிர்ச்சி கொடுத்து அசத்தியுள்ளது விஜய் டிவி.
மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சட்டம் சொல்வது என்ன?' என்கிற நிகழ்ச்சியின் மூலம், முதல் முதலில் தொகுப்பாளராக அடையாளம் காணப்பட்டவர் சித்ரா. பின்னர் நொடிக்கு நொடி அதிரடி, ஊர் சுற்றலாம் வாங்க, ஆகிய பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதை தொடர்ந்து சீரியல்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வந்தார்.
அந்த வகையில், சின்ன பாபா, பெரிய பாபா, சரவணன் மீனாட்சி, வேலூனாட்சி போன்ற போன்ற சீரியல்களில் நடித்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'பாண்டியன் ஸ்டார்' சீரியலில் முல்லை என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் ஏறக்குறைய 10 முக்கிய கதாப்பாத்திரம் இருந்தாலும், முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்ராவிற்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
மேலும், சமீப காலமாக விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கவர்ந்து வரும் சித்ராவிற்கு, இவருடைய பெற்றோர் சமீபகாலமாகவே மாப்பிள்ளை தேடி வருவதாக கூறி வந்த நிலையில் திருமண நிச்சயதார்த்தமும் முடிந்து விட்டது.
சித்ராவை திருமணம் செய்து கொள்ள உள்ளவர் பெயர் ஹேமந்த் என்றும், அவர் ஒரு தொழிலதிபர். ஏற்கனவே இவருடைய திருமண நிச்சயதார்த்தம் குறித்த சில புகைப்படங்கள் மட்டும் வீடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் இவர்களுடைய திருமணம் நடக்க உள்ளது.
இந்நிலையில், இவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க விரும்பிய விஜய் டிவி, கிராமத்து கொண்டாட்டம் என்கிற நிகழ்ச்சியில் இவருடைய வருங்கால கணவரை வர வழைத்து, இருவருக்கு நலங்கு, மற்றும் மோதிரம் மாற்ற வைத்துள்ளனர். இதுகுறித்த ப்ரோமோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.https://publish.twitter.com/?url=https://twitter.com/vijaytelevision/status/1318469591161401346
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.