
தளபதி விஜயின் மகன் ஜான்சன் சஞ்சய் தற்போது படித்து வரும் திரைப்படம் சம்பந்தமான படிப்பு முடிந்ததும், நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்... விஜய்யின் தீவிர ரசிகரும், மதுரை ரசிகர் மன்ற தலைவருமான மகேஷ்.
சமீபத்தில் மகேஷின் வீட்டிற்கு, விஜய்யின் பெற்றோர் ஷோபா மற்றும் எஸ்.ஏ சந்திரசேகர் இருவரும் நேரில் சென்று அவருடைய குடும்பத்தினரை சந்தித்து பேசியதோடு, சோபா அவர்களுக்கு தோசை சுட்டு கொடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாக பரவியது.
இதுகுறித்து பிரபல இணையதள ஊடகம் ஒன்றுக்கு தொலைபேசி மூலம் கொடுத்த கொடுத்த பேட்டியில், அவர் கிட்டத்தட்ட 1995 ஆண்டுகளாக விஜய்யின் தீவிர ரசிகராக இருந்து வருவதாகவும், விஜய்யின் பெற்றோர் எப்போது மதுரை வந்தாலும் நேரம் கிடைத்தால் தங்களுடைய குடும்பத்தை வந்து பார்க்க தவறியதில்லை என்றும் கூறியுள்ளார்.
தற்போது அவருடைய குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக தங்களையும் அவர்கள் கருதுவதாக பெருமையாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து பேசியுள்ள அவர், விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் படித்து வரும் திரைப்படம் சம்மந்தமான படிப்பு, இந்த வருத்தத்துடன் முடிவடைய உள்ளதாகவும், எனவே அடுத்த ஆண்டு இந்தியா வந்தபின், தமிழ் சினிமாவில் அறிமுகமாக வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் அவருடைய தந்தையை போலவே சஞ்சய் மிகவும் திறமையானவர் என்றும் கூறியுள்ளார் மகேஷ். இந்த தகவல்களை உறுதியாக கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.