
தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருந்து வரும் நடிகர் விஜய் சேதுபதி, அவருடைய நண்பர்களுக்காக நிறைய உதவிகளை செய்து வருகிறார். அவரின் அந்தஸ்தில் இருந்து இறங்கி வந்து நட்பு வட்டாரத்திற்காக சிறப்பு தோற்றங்களை ஏற்று நடிக்கிறார் இதுவே இவரின் வெற்றி என்று கூட சொல்லலாம்.
மேலும் நண்பர்களுக்காக சில படங்களில் வசனம் எழுதி கொடுக்கிறார். அவர் தனது சொந்த தயாரிப்பான 'ஆரஞ்சு மிட்டாய்' என்ற படத்துக்கு முதல் முறையாக வசனம் எழுதினர்.
இதைத்தொடர்ந்து, நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராத் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் படத்துக்கு விஜய் சேதுபதி திரைக்கதை - வசனம் எழுதி இருக்கிறார்.
ஏற்கனவே நடிகர், தயாரிப்பாளர், வசனகர்த்தா ஆகியோரின் வேலைகளை செய்துள்ள இவர் இப்போது திரைக்கதை ஆசிரியராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
'கதை ஞானம்' உள்ள கதாநாயகரகள் பட்டியலில் தற்போது இருவருடைய பெயரும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.