"சும்மா தெறிக்கவிடுறோம்"... மாஸ் கெட்டப்பில் விஜய் சேதுபதி... லீக்கானது "மாஸ்டர்" ஷூட்டிங் ஸ்பார்ட் வீடியோ...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jan 08, 2020, 12:03 PM IST
"சும்மா தெறிக்கவிடுறோம்"... மாஸ் கெட்டப்பில் விஜய் சேதுபதி... லீக்கானது "மாஸ்டர்" ஷூட்டிங் ஸ்பார்ட் வீடியோ...!

சுருக்கம்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி "மாஸ்டர்" ஷூட்டிங் ஸ்பார்ட்டில் நடிக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

'பிகில்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "மாஸ்டர்" படத்தில் நடித்துவருகிறார் தளபதி விஜய். ஆரம்பத்தில் தற்காலிகமாக "தளபதி 64" என தலைப்பு வைக்கப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு "மாஸ்டர்" என பெயரிடப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. பர்ஸ்ட் லுக் ரிலீஸையே பட ரிலீஸ் போல விஜய் ரசிகர்கள் சும்மா தெறிக்கவிட்டனர்.

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். சென்னை, டெல்லி, கர்நாடகா என 4 கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், தற்போது 5ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. அதில் விஜய் சேதுபதி சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி "மாஸ்டர்" ஷூட்டிங் ஸ்பார்ட்டில் நடிக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே டெல்லியில் நடைபெற்ற ஷூட்டிங்கின் போது விஜய்யின் கெட்டப் வெளியானதால், லோகேஷ் கனகராஜ் செம்ம அப்செட் ஆனார். 

இதையடுத்து படக்குழுவினர் ஷூட்டிங் ஸ்பார்ட்டில் செல்போன் பயன்படுத்த கூடாது என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், விஜய் சேதுபதி கேமராவை பார்த்து நடிக்கும் காட்சி எப்படி லீக்கானது என படக்குழுவினர் குழப்பத்தில் உள்ளனர். எது எப்படியிருந்தாலும் மாஸ் கெட்டப்பில் மக்கள் செல்வன் நடிக்கு காட்சியை பார்த்த விஜய், விஜய் சேதுபதி ஃபேன்ஸ் செம்ம குஷியாகி விட்டனர். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!